பால்டிமோர்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரகத்தில் இரு முனைகளை இணைக்கும் வகையில் நீரின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலத்தின் மீது சரக்கு கப்பல் பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் பாலம் உருக்குலைந்து நீரில் விழுந்தது. சம்பவ நேரத்தின் போது பாலத்தில் பயணித்து கொண்டு இருந்த வாகனங்கள் நீரில் விழுந்து மூழ்கின.
பலர் வாகனங்களுடன் நீரில் மூழ்கியதாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தின் மீது சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடித்து சுக்குநூறாக விழும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
கடந்த 1977 ஆம் ஆண்டு படாப்ஸ்கோ நதியின் குறுக்கே பிரான்சிஸ் ஸ்காட் பாலம் கட்டப்பட்டு உள்ளது. பால்டிமோர் துறைமுகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் சரக்கு கப்பல்கள் சென்று வர பிரதான வழித்தடமக காணப்படும் இடத்தில் இந்த பாலம் அமைந்து உள்ளது. சரக்கு கப்பல் மோதிய போது அதிகளவிலான வாகனங்கள் பாலத்தின் மீது இருந்ததாக கூறப்படுகிறது,
எத்தனை வாகனங்கள் நீரில் மூழ்கின என்ற முழுத் தகவலும் தெரியவராத நிலையில், தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : காஸாவில் உடனடி போர் நிறுத்தம் - ஐநா தீர்மானம் நிறைவேற்றம்! பின்வாங்கிய அமெரிக்கா - இஸ்ரேல் மீது அதிருப்தியா? - UN Resolution On Ceasefire In Gaza