ETV Bharat / international

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவுக்கு சவால் விடும் அமெரிக்கா! தைவான் நிறுவனத்திற்கு 6.6 பில்லியன் டாலர் நிதி! - Semi Conductor - SEMI CONDUCTOR

சீனா - தைவான் இடையே நீண்ட காலமாக போர் சூழல் நிலவி வரும் நிலையில், தைவானை சேர்ந்த மைக்ரோசிப் தயாரிப்பு நிறுவனம் தனது அலுவலகத்தை அமெரிக்காவில் விரிவாக்கம் செய்து கொள்ள 6 புள்ளி 6 பில்லியன் டாலரை அதிபர் பைடன் தலைமையிலான அரசு ஒதுக்கி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Apr 8, 2024, 3:21 PM IST

Updated : Apr 9, 2024, 12:56 PM IST

வில்மிங்டன் : செமி கண்டக்டர் சிப்களின் தேவை என்பது நிகழ் காலத்தில் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. ஆட்டோ மொபைல், தொழில்நுட்பம், மொபைல் தயாரிப்பு, ராணுவ தளவாடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த செமி கண்டக்டர்களின் பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது.

உலக அளவில் செமி கண்டக்டர் தயாரிப்பில் தைவான் முன்னணியில் உள்ளது. அதேநேரம் தைவானை தன் கட்டுக்குள் கொண்டு வந்து செமி கண்டக்டர் துறையை தன் கைவசம் வைத்து கொள்ள சீனா முயற்சித்து வருகிறது. இதனால் சர்வதேச அளவிலான செமி கண்டக்டர் உற்பத்தியில் தைவானை மட்டும் நம்பியிருக்காமல் பல்வேறு நாடுகள் மைக்ரோ சிப் தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்தியாவில் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் செமி கண்டக்டர் உற்பத்தி மற்றும் அசம்பிளி ஆலை கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் ஆலை குஜராத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டெண்டர் வழிமுறைகளில் டாடா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

அதேநேரம், அமெரிக்காவும் செமி கண்டக்டர் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகிறது. தைவான் நிறுவனங்களை அமெரிக்காவில் உற்பத்தி ஆலை தொடங்க வைத்து அதன்மூலம் தனது ஆட்டோ மொபைல், ராணுவத்திற்கு தேவையான மைக்ரோசிப் உற்பத்தியில் தன்னிறைவு பெற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் பகுதியில் தைவான் செமி கண்டக்டர் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், அந்த ஆலையை விரிவாக்கம் செய்ய 6.6 பில்லியன் அமெரிக்க டாலரை அதிபர் பைடன் தலைமையிலான அரசு ஒதுக்கி உள்ளது.

இது குறித்து பேசிய அமெரிக்கா வர்த்தக துறை அமைச்சர் ஜினா ரெய்மெண்டோ, அரசு ஒதுக்கிய நிதியின் மூலம் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அரிசோனாவில் உள்ள பீனிக்சில் உள்ள இரண்டு உள்கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்யவும் புதிதாக உற்பத்தி ஆலை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பீனிக்ஸ் பகுதியில் ஆலை தொடங்கப்பட்டு செமி கண்டக்டர் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு ஆலையின் இரண்டாவது உற்பத்தி நிலையம் 40 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த முதலீட்டை 65 பில்லியன் அமெரிக்கா டாலர்களாக மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : கேரள மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை வழக்கு - 29 மணி நேரம் ராகிங் எனத் தகவல்! சிபிஐ தீவிர விசாரணை! - Kerala College Student Suicide

Last Updated : Apr 9, 2024, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.