ETV Bharat / international

ஹைதி அகதிகள் படகில் தீவிபத்து: 40 பேர் பலி! - Haiti Boat Fire 40 dead

ஹைதியில் அகதிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

Representative Image
Representative Image (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 1:13 PM IST

போர்ட் அயு பிரின்ஸ்: வட அமெரிக்க நாடான ஹைதியில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற சூழல் மற்றும் உள்நாட்டு கலவரம் காரணமாக பொது மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, அந்த நாட்டைச் சேர்ந்த பலரும் அண்டை நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் 80க்கும் மேற்பட்ட ஹைதியை சேர்ந்த மக்களை ஏற்றிக் கொண்டு டர்க் மற்றும் கைகோஸ் தீவுகளுக்கு படகு ஒன்று சென்றது. அந்த தீவுகளுக்கு குடிபெயர்வதற்காக மக்கள் சென்று கொண்டிருந்த போது நடுக்கடலில் தீடீரென படகில் தீப்பிடித்தது. இதனால், படகில் இருந்தவர்கள் பதற்றத்திற்கு ஆளாகி தண்ணீருக்குள் குதித்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முயன்றனர்.

இந்த துயர சம்பவத்தில் படகில் பயணித்த 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹைதி கடலோர படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்த 41 பேரை மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் பலருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹைதி நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற சூழலை அடுத்து அண்டை நாடுகளுக்கு மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். இருப்பினும் அந்த நாடுகளில் இருந்து ஹைதி மக்கள் திருப்பி அனுப்பபடுகின்றனர். நடப்பாண்டில் மட்டும் பொருளாதார் சூழல் தேடி அண்டை நாடுகளுக்கு சென்ற 86 ஆயிரம் ஹைதி மக்கள் திரும்பப் சொந்த நாட்டிற்கே அனுப்பப்பட்டனர்.

இதில் கடந்த மார்ச் மாதம் மற்றும் 13 ஆயிரம் பேர் திரும்பப் அனுப்பப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் புதிய பிரதமர் கேரி கோனைல் பதவியேற்ற பின் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "கடவுள் என்னை காப்பாற்றினார்.." துப்பாக்கிச் சூடுக்கு பின் டிரம்ப் முதல் முறை தேர்தல் பிரசாரம்! - US president Election Donald Trump

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.