அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபியில் ஏறத்தாழ 700 கோடி ரூபாயில் செலவில் இந்து கோயில் கட்டப்பட்டது. ஏறத்தாழ 27 ஏக்கர் நிலப் பரப்பில் கட்டப்பட்ட இந்த கோயிலை பிரதமர் மோடி கடந்த 14ஆம் தேதி திறந்து வைத்தார். ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை இந்த கோயிலை சுற்றிப்பார்க்க, சாமி தரிசனம் செய்ய உலகளவில் முன்பதிவு செய்து இருந்த விஐபி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி முதல் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கோயில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என்றும் வாரந்தோறும் திங்கட்கிழமை கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ராஜஸ்தானில் இருந்து நேரடியாக கொண்டு வரப்பட்ட 18 லட்சம் செங்கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொண்டு கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டபட்டு உள்ள ராமர் கோயிலை பின்பற்றி அதேபோல் நகரா வடிவமைப்பில் அபுதாபி கோயிலும் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏறத்தாழ மூன்றரை கோடி இந்தியர்கள் உள்ள நிலையில் அனைத்து மத வழிபாட்டுக்கு அதரவு அளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த கோயிலை தானமாக வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : டெல்லி மதுமான கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறை சம்மன்! அமலாக்கத்துறை திட்டம் என்ன?