காத்மண்டு: நேபாளத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மத்திய நேபாளத்தில் மதன் - அஷ்ரீத் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேருந்துகள் அருகில் இருந்த திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Rescue and search operation underway after two buses carrying around 63 passengers were swept away into the Trishuli River due to a landslide on the Madan-Ashrit Highway in Central Nepal this morning.
— ANI (@ANI) July 12, 2024
(Source: Purushottam Thapa, DIG of the Armed Police Force, Nepal) pic.twitter.com/OqhYc6C6wz
இரண்டு பேருந்தில் பயணித்த 66 பேர் ஆற்றில் விழுந்து மாயமானதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஒரு பேருந்தில் 24 பேரும் மற்றொரு பேருந்தில் 42 பேரும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணி அளவில் மதன் - அஷ்ரீத் நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் வீரர்கள் மீட்பு பணியை துரிதப்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பருவ மழைக் காலம் ஆகும்.
A landslide swept two buses carrying an estimated 63 passengers, on Madan-Ashrit Highway in Central Nepal into the Trishuli River, this morning.
— ANI (@ANI) July 12, 2024
(Source: Road Division Office, Bharatpur, Nepal) https://t.co/1LZ1qYcXcQ pic.twitter.com/1xSFDB5uZY
அதன்படி, நடப்பாண்டில் பருவமழை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர் கனமழை பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்: ஜுலை 18-க்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை; என்ன காரணம்? - neet exam 2024 case