ETV Bharat / health

இன்று உலக இதய தினம்! இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி? - World Heart Day 2024 - WORLD HEART DAY 2024

World Heart Day 2024: இதய நோய்கள் (Cardiovascular diseases (CVDs) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 4:44 PM IST

Updated : Sep 29, 2024, 5:03 PM IST

ஹைதராபாத்: 1999ஆம் ஆண்டு உலக இதய கூட்டமைப்பு (WHF - World Heart Federation), உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organization) இணைந்து உலக இதய தினத்தை நிறுவுவதாக அறிவித்தது. உலக இதய தினம், முதன் முதலாக செப்டம்பர் 24, 2000ஆம் ஆண்டு அன்று கடைபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, உலகளாவிய பார்வையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், 2011ஆம் ஆண்டில் உலக இதய தினத்தை செப்டம்பர் 29 என்று நிர்ணயிக்க உலக இதய கூட்டமைப்பு முடிவு செய்தது. இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், இருதய நோய்களுடன் தொடர்புடைய ஆபத்து மற்றும் அவற்றை எவ்வாறு தடுப்பது, கட்டுப்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு தெரிவிப்பதே, உலக இதய தினத்தின் முதன்மை நோக்கமாகும்.

கருப்பொருள்: உலக இதய தினத்தின் இந்த ஆண்டு கருப்பொருள் ‘இதயம் சார்ந்து செயல்படுங்கள்’ என்பதாகும்.

இதய நோய் இறப்புகள்: மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு போன்றவை ஒவ்வொரு ஆண்டும் 20.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இறப்புகள் பெரும்பாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்கின்றன. தென்கிழக்கு ஆசிய பிராந்தியமானது தொற்றாத நோய்களின் (NCDs) மிக அதிக சுமையை அனுபவித்து வருகிறது. மொத்த இறப்புகளில் 30 சதவீதம் பேர் இருதய நோய்களால் (CVDs) ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இதய நோய்க்கான அறிகுறிகள்: மார்பு வலி, கை, கால்களில் வலி மற்றும் வீக்கம், மூச்சுத் திணறல், மிக வேகமாக அல்லது மெதுவான இதயத் துடிப்பு, படபடப்பு, தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஆகியவை இதய நோய்க்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகளாகும்.

இதையும் படிங்க: கர்ப்பிணிகள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? தூக்கமின்மையால் குழந்தைக்கு பிரச்னையா? - Effects of insomnia in pregnancy

இதய நோய்க்கான காரணங்கள்: புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்ளுதல், துரித உணவுகள், அதிக உப்பு உட்கொள்ளல், உடல் செயல்பாடு இல்லாமல் இருத்தல், கேஸ் நிறைந்த உணவுகளை உட்கொள்ளல் ஆகிய செயல்பாடுகளால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

இதய நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

  • இதய நோய்கள் வராமல் தடுக்க புகை பிடித்தலை நிறுத்த வேண்டும்.
  • அதிக உப்பு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • சமச்சீரான உணவை உண்ண வேண்டும்.
  • உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும்.
  • கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
  • பாதாம், அக்ரூட் ஆகிய பருப்புகள் மற்றும் ஆளி விதைகள் ஆகியவற்றை உண்ணலாம்.
  • கொய்யா, மாதுளை, பப்பாளி உள்ளிட்ட பழங்கள், கீரை வகைகள், காய்கறிகளை உண்ணலாம்.
  • சால்மன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்

ஆகியவற்றை வாழ்க்கை முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம் என இருதயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Sep 29, 2024, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.