ETV Bharat / health

அந்த விஷயத்தில் இந்தியர்கள் எப்படி? உலக அளவில் வெளியான ஆய்வின் முடிவுகள்..! - Indians Are The Least Promiscuous

உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் மிகக் குறைந்த பாலியல் துணையை நாடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது மற்ற நாடுகள் எவ்வளவு பாலியல் துணையை நாடுகிறார்கள். இந்தியர்கள் ஏன் இதில் கடைசி இடத்தை பிடித்துள்ளார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ETV bharat
ETV bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 10:47 PM IST

Updated : Apr 12, 2024, 4:24 PM IST

சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் 46 நாடுகளில் 2024ஆம் ஆண்டுக்கான நாட்டின் ஒட்டு மொத்த சராசரி பாலியல் துணைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் 14.5 பாலியல் துணைகளுடன் துருக்கி முதல் இடத்திலும், வாழ்நாள் முழுவதும் அதிகபட்சம் 3 பாலியல் துணைகளுடன் இந்தியா 46-வது இடத்திலும் உள்ளது. இதற்கான காரணம் என்ன? இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? என்பன உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து நிபுணர்களிடம் ஈடிவி பாரத் கேள்வி எழுப்பியது.

இது குறித்துப் பேசிய, குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் சமூகம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சமூக அறிவியல் பள்ளியின் இணைப் பேராசிரியரான சுபாஷ் குமார், பொதுவாக இந்தியர்கள் நெறிமுறைகளை வகித்து, அதற்குக் கட்டுப்பட்டு வாழும் வாழ்வியலைக் கொண்டுள்ளனர்.

அதைத் தாண்டி பல நபர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள இந்த சமூகம் அனுமதிக்காது. மேலும் இந்தியாவின் கலாச்சாரமும், கட்டுப்பாடுகளும், வழிகாட்டுதல்களும் ஒரு நபருக்கு நம்பகத்தன்மையான துணையை ஏற்படுத்திக் கொடுக்கிறது எனவும் இதுவே இந்தியா பாலியல் கூட்டாளிகள் வைத்திருக்கும் எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருக்கக் காரணம் எனவும் குறிப்பிட்டார்.

அதேநேரம், மனம் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் ஒரு நபர் தனது வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் துணையை நாடும் சூழல் ஏற்படுகிறது எனவும், இதற்குக் கவலை, மனச்சோர்வு, தொழில் ரீதியான சவால்கள் உள்ளிட்ட பலவற்றை அடங்கும் எனவும் கூறினார்.

மேலும், இந்தியாவைப் பொருத்தவரை கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பெரும்பாலும் ஒருவர் ஒரு துணையுடன் தான் தனது ஒட்டுமொத்த வாழ்நாளையும் கழிக்கிறார் எனவும், திருமணத்திற்கு முந்தைய பாலியல் வெளிப்பாட்டிற்கும் அவர்கள் செல்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து பேசிய நொய்டாவில் உள்ள ஜேபி மருத்துவமனையின் மருத்துவ உளவியலாளர் மருத்துவர் பிரியங்கா ஸ்ரீவஸ்தவா, ஒட்டு மொத்த சராசரி பாலியல் துணைகள் கணக்கெடுப்புப் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தில் வரக் காரணம், இங்குள்ள கலாச்சாரமும், மதிப்பும்தான் எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் ஒரு நபர் தனது மரணம் வரை ஒரு வாழ்க்கைத் துணையை நாடி இருக்கிறார் எனவும், ஆனால் சமீப காலமாக மேற்கத்தியக் கலாச்சாரமும், குறைவான திருமண எண்ணிக்கைகளும் காணப்படுவதாகவும்,பெண்கள் படிப்பிலும், அறிவிலும், வேலை வாய்ப்பிலும், தன்னிச்சையாக வாழும் சூழலிலும் முன்னேறியுள்ளனர். இதனால், பாலியல் துணையைத் தேர்வு செய்தலில் துணிச்சலும், சுதந்திரமும் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் துணையை நாடுவது என்பது, கலாச்சாரம், இறை நம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டுக்கு நாடு வேறுபடலாம் எனவும் அமெரிக்காவைப் பொருத்தவரை அந்நாட்டிற்குள்ளேயே உள்ள பகுதிகளுக்குப் பகுதி வேறுபாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்கர்கள் சராசரியாக தங்கள் 17வது வயதிலேயே கன்னித்தன்மையை இழந்து விடுவதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.

இதையும் படிங்க: காத்திருப்பு அழகா? அவஸ்தையா? ஆய்வு கூறுவது என்ன? - Waiting Causes Anxiety Mood Changes

Last Updated : Apr 12, 2024, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.