ETV Bharat / health

ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைய என்ன காரணம்? ஆய்வுகள் கூறும் அதிர்ச்சித் தகவல்.! - What causes low sperm count in men - WHAT CAUSES LOW SPERM COUNT IN MEN

உலக அளவில் மட்டும் அல்ல இந்தியாவிலும் ஆண்களின் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைந்து வரும் நிலையில் இதற்கு என்ன தீர்வு? என்பது குறித்துப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 2:01 PM IST

Updated : Apr 19, 2024, 11:04 AM IST

சென்னை: மனித தலைமுறையை அடுத்த கால கட்டத்திற்குக் கொண்டு செல்லப் பெண்களின் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆண்களின் ஆரோக்கியமும் முக்கியம். இன்றைய காலத்தில் வாழ்வியல் மாற்றம், ஆரோக்கியம் அற்ற உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்கள் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மருத்துவ ஆராய்ச்சியின் அடிப்படையில் 35 வயதைக் கடக்கும் போதே ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும். ஆனால் இன்றைய சூழலில் 35 வயதிற்கும் குறைவான ஆண்களுக்குக்கூட இந்த பிரச்சனை வரத்தொடங்கி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஹியூமன் ரீபுரோடக்ஷன் அப்டேட் என்ற இணையதளப் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுரையில், உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் ஒரு காலகட்டத்தில் மனித இனம் அழிந்து விடும் அளவுக்குச் சிக்கல்கள் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதை அடிக்கோடிட்டுக்காட்டி பிரபல செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கருவுறுதல் பற்றிய கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!

நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வு விவரம்: அதேபோல, நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வுக்கட்டுரையில் கடந்த 37 ஆண்டுகளில் ஆண்களின் விந்தணு தரம் வெகுவாக குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் கடந்த 2016-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்களின் விந்தணு தரம் குறைந்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தகவல்களைப் பகிர்ந்து வந்தன.

இதன் அடிப்படையில், அது குறித்து நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் குழைந்த பெற்ற ஆண்களை உட்பட மலட்டுத்தன்மை உடைய ஆண்கள் சுமார் 13 ஆயிரம் ஆண்களின் விந்தணுக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், ஆண்களின் விந்தணுவின் தரம் படிப்படியாகக் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. மேலும் ஆரோக்கியமான விந்தணுக்களுடன் ஒப்பிடும்போது மலட்டுத்தன்மை உடைய விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகக்காணப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டோடு 2024-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இளைய தலைமுறையினர் மத்தியில் ஆரோக்கியம் அற்ற வாழ்வியல் நடைமுறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலை காலப்போக்கில் ஆரோக்கியம் அற்ற சமுதாயத்திற்கு மனிதக் குலத்தை அழைத்துச்செலும் சூழல் உருவாகி வருவதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆண்கள் உடலில் விந்தணு எண்ணிக்கை குறைய எண்ணக் காரணம்?

  • ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்
  • உடல் உழைப்பு இல்லாமை
  • உடற்பயிற்சியின்மை
  • போதிய தூக்கமின்மை
  • மன அழுத்தம்
  • புகை பிடித்தல்
  • மது அருந்துதல்
  • போதை பழக்கம்

இப்படி இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன... அதே நேரம் ஆய்வில் குறிப்பிடப்படாத தகவல்களை வைத்து ஆண்கள் தேவையற்ற பயம் கொள்கிறார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது அதீத சுய இன்பம் கொள்ளுதல் ஆண்களின் விந்தணு குறையக் காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனக்கூறும் மருத்துவர்கள், சுய இன்பம் கொள்வதால் உங்கள் துணையுடனான உடலுறவில் முழுமை பெறமுடியாமல் போகலாமே தவிர விந்தணு குறைபாடு ஏற்படாது எனக்கூறுகின்றனர். மேலும், விந்தணு குறையக் காரணமாக இருக்கும் சில ஆரோக்கியம் அற்ற பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் உங்கள் விந்தணு அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், உடற்பயிற்சி, விளையாடுதல் அல்லது உடல் உழைப்பில் ஈடுபடுதல் உள்ளிட்ட நேரங்களில் தளர்வான காட்டன் துணிகளை அணிவது சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் இந்த விஷயத்தில் எவ்விதக்கூச்சமும் இன்றி மருத்துவரை அணுகி விந்தணு எண்ணிக்கை பரிசோதனை மேற்கொண்டு அறிவுரை பெறலாம். சரி இதில் நாட்டு வைத்தியம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது பற்றிப் பார்க்கலாம்.

முருங்கை பிசினி ஆண்களின் விந்தணுக்கள் அதிகரிக்கவும், நீர்த்துப்போன விந்தணுக்கள் சமநிலை பெறவும் மிகுந்த பலன் அளிக்கும் என, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட நாட்டுப்புற மருத்துவம் ஒரு ஆய்வு என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முருங்கை பிசினி என்பது முருங்கை மரத்தில் இருந்து வெளியேறும் பசையாகும்.

இந்த பசையை எடுத்து வந்து உலர வைத்து ஒரு பாட்டில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இவை நாட்டு மருந்துக் கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கிறது. இந்த முருங்கை பிசினி ஒரு பிடி எடுத்து ஒரு சிறிய மண் பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊர வையுங்கள். இரவு உற வைத்து காலையில் அந்த தண்ணீரை மட்டும் எடுத்துக் குடியுங்கள். மேலும் அந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து உங்களுக்குத் தாகம் எடுக்கும் போதெல்லாம் அந்த தண்ணீரைக் குடித்து வந்தால்போதும் விந்தணு எண்ணிக்கை மிக விரைவிலேயே குணமடைந்துவிடும்.

இதையும் படிங்க: சண்டை போட்டாலும் காதல் குறையாமல் இருக்க வேண்டுமா? உங்களுக்காகத்தான் இந்த தகவல்.! - Romantic Things To Do With Partner

Last Updated : Apr 19, 2024, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.