சென்னை: பெண்களுக்கு உதட்டின் மேல் பகுதி மற்றும் தாடை உள்ளிட்ட முகத்தின் ஒரு சில பகுதிகளில் ஆண்களைப் போலவே முடி வளருவதைப் பார்த்திருப்போம். அவர்களின் தன்னம்பிக்கை அளவை குறைக்கும் வகையில் இருக்கும் இந்த பிரச்சனையால் பெண்கள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் பலர், அழகு நிலையங்கள் மற்றும் காஸ்மெட்டாலஜி மருத்துவமனைகளுக்குச் சென்று இதற்குத் தீர்வு காணவும் முயற்சிக்கின்றனர். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தாலும் அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் அவதிப்படும் பெண்கள் முன்னோர்கள் மேற்கொண்ட சில செயல்பாடுகளை தங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்தாலே போதும் இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண முடியும்.
முகத்தில் முடி வளர என்ன காரணம்? உடலில் ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்படும் மாற்றத்தால் இந்த பிரச்சினை வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது ஆண்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை போலவே பெண்கள் உடலிலும் அந்த ஹார்மோன் சற்று அதிகமாகச் சுரக்கும் பொழுது இந்த முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும் எனவும், சாதாரணமாகப் பெண்களுக்கு இருக்கும் முகத்தின் முடியை ஷேவ் செய்வதன் மூலம் அது மேலும் அடத்தியாக வளர வழிவகை செய்யும் எனவும் கூறப்படுகிறது.
இதை முழுமையாக அகற்ற என்ன செய்யலாம்? முகத்தில் இருக்கும் முடி பெண்களின் அழகைப் பாதிக்கும் என்பதால் அதை உடனடியாக அகற்றியாக வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அது நிரந்தர தீர்வாக அமையாது எனக் கூறப்படுகிறது. இந்த முக முடிகளை அகற்ற நாள்தோறும் முகத்திற்கு மஞ்சள் கிழங்கை அரைத்து தேய்ப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.
மஞ்சளை எப்படிப் பயன்படுத்தினால் சிறந்த வகையில் தீர்வு காண முடியும்? மஞ்சளை மட்டும் அரைத்து தேய்ப்பதே சிறந்ததுதான். ஆனால் அதனுடன் இன்னும் சில பொருட்களைக் கலந்து ஒரு பேக் போல் முகத்தில் அப்ளை செய்து வந்தால் மேலும் சிறந்த பலன் கிடைக்கும்.
மஞ்சள் ஹேர் ரிமூவ் ஃபேஸ் பேக் எப்படிச் செய்வது?
தேவையான பொருட்கள்
- கஸ்தூரி மஞ்சள்: 1/2 டீ ஸ்பூன்
- அரிசி பொடி: 1 டீ ஸ்பூன்
- கடலை மாவு 1 டீ ஸ்பூன்
- தேன்: 1 டீ ஸ்பூன்
- முல்தானி மிட்டி: 1 டீ ஸ்பூன்
- பப்பாளிப் பழம்: 1 டீ ஸ்பூன்
இவை அனைத்தையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்துகொள்ள வேண்டும். இதை முடி இருக்கும் பகுதியில் நன்றாக ஸ்க்ரப் செய்து கொடுக்க வேண்டும். பிறகு 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு மெதுவாக ஒரு ஈரமான காட்டன் துணியால் வட்ட வடிவில் மெதுவாகத் துடைத்து எடுக்க வேண்டும்.
இதேபோன்று தொடர்ந்து அடிக்கடி செய்து வரும் பொழுது முகத்தில் வளரும் முடி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். அதேபோல், நாள் தோறும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு மஞ்சள் போட்டு முகம் கழுவுவது இதற்கு நல்ல பலன் தரும்.
இதையும் படிங்க: குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் நல்வழிப்படுத்த முடியுமா? UNICEF சொல்லும் அற்புத வழிகள்! - Gentle PARENTING TIPS