சென்னை: தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சௌந்தர்யா (30) என்பவர், அப்லாஸ்டிக் அனீமியா - APLASTIC ANEMIA (குறைப்பிறப்பு இரத்த சோகை) புற்றுநோய் காரணமாக இன்று (ஜூலை 26) உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அப்லாஸ்டிக் அனீமியா என்றால் என்ன? இவை எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
அப்லாஸ்டிக் அனீமியா என்றால் என்ன? அப்லாஸ்டிக் அனீமியா என்பது மிக அரிதான பிரச்னையாகும். நமது உடல் இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி சோர்வை ஏற்படுத்தும் தீவிரமான நிலையாகும். நம் உடல் சீராக இயங்குவதற்கு தேவையான புதிய ரத்த அணுக்கள் எலும்புகளின் மஜ்ஜைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும். ஆனால், எலும்பு மஜ்ஜை போதுமான எண்ணிக்கையிலான ரத்த அணுக்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் இவை ஏற்படுகிறது. எந்த வயதிலும் இவை ஏற்படலாம். இவை படிப்படியாக தொடங்கி காலப்போக்கில் மோசமடையும்.
அப்லாஸ்டிக் அனீமியா எதனால் ஏற்படுகிறது? உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் போன்ற அனைத்து உயிரணு வகைகளிலும் பற்றாக்குறை இருக்கலாம். இந்த இரத்த அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப்படுகின்றன. சிலருக்கு எலும்பு மஜ்ஜையின் அப்லாசியா இரத்த அணுக்களின் உற்பத்திக்கு காரணமான எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம் செல்களை செயலிழக்கச் செய்கிறது. இதன் விளைவாக, எலும்பு மஜ்ஜை குறைவான இரத்த அணுக்களை உருவாக்குகிறது. இதன் விளைவாக அப்லாஸ்டிக் அனீமியா ஏற்படுகிறது.
அப்லாஸ்டிக் அனீமியாவின் அறிகுறிகள்:
- உடல் சோர்வு
- இரத்தப்போக்கு - ஈறுகளில் இரத்தப்போக்கு அல்லது மூக்கில் இரத்தப்போக்கு
- தலைசுற்றல், மயக்கம்
- தோலில் தடிப்புகள்
- மூச்சுத்திணறல்
- காய்ச்சல்
- தலைவலி
- மஞ்சள் காமாலை
- சீரற்ற இதயத் துடிப்பு
அப்லாஸ்டிக் அனீமியா சிகிச்சை முறை: அப்லாஸ்டிக் அனீமியாவிற்கான சிகிச்சை என்பது நோய் நிலையின் தீவிரம் மற்றும் நோயாளியின் வயதைப் பொறுத்தது.
- இளம் நோயாளிகளாக அல்லது திடமான நோயாளிகளாக இருந்தால் அவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்படும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்.
- இரத்தம் மாற்றம்.
- நோயாளியின் எலும்பு மஜ்ஜை தாக்குவதை தடுப்பதற்கு நோய் எதிர்ப்புத் தடுப்பு மருந்துகள் அளிக்கப்படும். இதனால், நோயாளிகள் மற்ற தொற்றுநோய்களில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை.
அப்லாஸ்டிக் அனீமியாவிற்கு முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் இதயம் செயலிழப்பு போன்ற தீவிர நிலை ஏற்படும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் உயிரிழப்பு.. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல்! - News Reader Died