ETV Bharat / health

எடை இழப்பு முதல் முடி வளர்ச்சி வரை..தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்!

உடல் எடை அதிகரிப்பு, முடி உதிர்வு, சரும பிரச்சனை, செரிமான கோளாறு என அனைத்திற்கும் தீர்வாக இருக்கும் நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டால் நல்லதா? அதிகம் சாப்பிட்டால் நடப்பது என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்..

author img

By ETV Bharat Health Team

Published : 3 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits- GETTY IMAGES)

பண்டைய காலம் தொட்டு ஆயுர் வேதத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுவது நெல்லிக்காய். இதை தினமும் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக சமீபத்தில் நிறைய கருத்துகள் பரவி வருகின்றன. இந்நிலையில், தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? அதிகம் எடுத்துக்கொண்டால் என்னவாகும் என்பதை பற்றி பார்க்கலாம்..

  • தினசரி நெல்லிக்காயை எடுத்துக்கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை அடிக்கடி வராமல் தடுக்கிறது.
  • பழ வகைகளிலேயே அதிகமான வைட்டமின் சி கொண்டிருப்பது நெல்லிக்காய் தான். நெல்லிக்காயிற்கு அடுத்ததாக, கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. குறிப்பாக, வெள்ளை கொய்யாப்பழத்தை விட சிவப்பு கொய்யாவில் அதிக வைட்டமின் சி உள்ளது.
  • தினசரி நெல்லிக்காயை உட்கொள்ளும் போது, இரைப்பையில் அமிலங்கள் சுரக்கப்பட்டு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது. நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குவதோடு நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • நெல்லிக்காயில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மற்றும் இளநரை போன்ற பிரச்சனைகள் சரியாகும். முடி வேர்களை வலிமையாக வைத்து முடியின் அடர்த்தியை அதிகரிக்கிறது.
  • நெல்லிக்காயில் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ஸ்ட் இருப்பதால், மூளையில் உள்ள நரம்பு செல்களை பலப்படுத்துகிறது. இதனால், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, ஞாபக சக்தி அதிகமாகும். பள்ளிக்குழந்தைகள் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதால் அவர்களுக்கு ஞாபக திறன் அதிகரித்து அதிக மதிப்பென்களை பெறுவார்கள்.

இதையும் படிங்க: தினமும் ஆளி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்..பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கனும்!

  • இதயக்குழாயில் கொழுப்புகள் சேருவதை நெல்லிக்காய் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், மாரடைப்பு ஏற்படுவதை குறைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. நெல்லிக்காயில் உள்ள கரையக்கூடிய கொழுப்புக்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது.
  • உணவருந்திய பின், நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளும் போது, நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள மாவுச்சத்து இரத்தத்தில் வேகமாக கலப்பதை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருகக்கலாம்.
  • நெல்லிக்காயில் வைட்டமின் A உள்ளதால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் உறிஞ்சப்படுவதை நெல்லிக்காய் ஊக்குவிக்கிறது. இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்ட பின் நெல்லிக்காய்யை சாப்பிடுவதால், உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிய உதவி விரைவில் இரத்த சோகை குணமாகும்.

அதிகம் சாப்பிட்டால்?: தினசரி, 5 முதல் 6 நெல்லிக்காயை வழக்கமாக சாப்பிட்டு வரும் போது, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நெல்லிக்காய் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்காவிட்டால், பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்களில் உள்ள எனாமிலை சேதப்படுத்தும். இதற்கு, நெல்லிக்காய் சாப்பிட்டதும் ஒரு கிளாஸ் தண்ணீரால் வாயை கொப்பளிக்க வேண்டும்.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.