பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைக்க மட்டுமே வெந்நீரில் எலுமிச்சை சாறும் தேன் கலந்து குடிக்கின்றனர். ஆனால், இதை குடிப்பதால் ஏற்படும் பல நன்மைகளில் ஒன்று தான் எடை இழப்பு என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ராக்கி சாட்டர்ஜி.
காலையில் எழுத்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீரில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடிப்பதால் பல ஆரோக்கிய நண்மைகள் கிடைக்கின்றனர். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது வரப்பிரசாதமாக இருக்கிறது.
சத்துக்கள் என்ன?: எலுமிச்சையில் வைட்டமின் பி,சி,மெக்னீசியம்,பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றி தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது. எலுமிச்சை மற்றும் தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிக கொலாஜனை உற்பத்தி செய்து சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. இப்போது, இதை குடிப்பதால் கிடைக்கும் மற்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பசியைக் கட்டுப்படுத்துகிறது: வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழம் நீருடன் தேன் கலந்து பருகினால் பசி கட்டுப்படும். இது நாள் முழுவதும் ஏற்படும் பசியை தவிர்த்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்கிறார் ராக்கி சாட்டர்ஜி.
செரிமானத்திற்கு நல்லது: எலுமிச்சை சாறு நமது செரிமான அமைப்பை சீராக வைத்திருக்கிறது. இது நமது வயிற்றில் அமிலம் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் பித்த சுரப்பை தூண்டுகிறது. இதன் விளைவாக, செரிமானம் சரியாக நடைபெற உதவியாக இருக்கிறது. குடல் இயக்கங்கள் மேம்படுத்துவதோடு வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அஜீரணத்தின் அறிகுறிகளைக் குறைக்கிறது.
சர்க்கரை அளவை சீராக்கும்: தேனில் சர்க்கரையை விட குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் சிறிதளவு எலுமிச்சை மற்றும் தேன் கலந்த தண்ணீரை குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேன் மற்றும் எலுமிச்சை கலவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
தோல் ஆரோக்கியம்: எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை குறைக்கிறது. இதனால், சருமம் ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது.
உடலை ஹைட்ரேட் செய்கிறது: உடல் எடையை குறைக்க உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் தேன் மற்றும் எலுமிச்சை நீரை சேர்ப்பது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது மறைமுறமாக பசியைக் கட்டுப்படுத்துகிறது.
நச்சுக்களை நீக்குகிறது: தினமும் எலுமிச்சை நீரை தேன் சேர்த்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றலாம். ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் நச்சுகளிலிருந்து உடலைப் பாதுகாப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: தொங்கும் தொப்பை-ஐ குறைக்க வெள்ளை பூசணி ஜூஸ்..எப்படி குடிக்கணும் தெரியுமா? வெந்தய தண்ணீரை குடிப்பதால் சர்க்கரை அளவு கட்டுப்படும்?..ஆய்வு சொல்வது என்ன? |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்