ETV Bharat / health

இந்த 5 பழம் போதும்...உங்க கிட்னி குஷியா இருக்கும்! - Best fruits for kidney health - BEST FRUITS FOR KIDNEY HEALTH

kidney health tips: உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கிறதா? சிறுநீரகம் சீராக செயல்பட வேண்டுமா? அப்படி என்றால் இந்த 5 பழங்களை மறக்காமல் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 11, 2024, 3:55 PM IST

ஹைதராபாத்: உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம், இரத்தத்தை சுத்தப்படுத்தவும், உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி உடலை சுத்தமாக வைத்திருக்க இயங்கி வருகிறது. ஆனால், சில நேரங்களில் நமது உடலில் ஏற்படும் நச்சுக்கள் சிறுநீரகத்தை சேதப்படுத்தி முற்றிலுமாக செயலிழக்கச் செய்கிறது.

இந்த சூழலில், பெர்ரி, ஆப்பிள் மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான தேசிய நிறுவனத்தலால் (NIDDK) வெளியிடப்பட்ட சிறுநீரக ஆரோக்கியத்திற்கான உணவு உரிமை ஆய்வில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

சீறுநீரகத்தை காக்கும் பழங்கள் என்னென்ன? அதில் உள்ள நண்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..

கிரான்பெர்ரி (Cranberry): குருதிநெல்லி என அழைக்கப்படும் கிரான்பெர்ரி பழங்களில் புரோந்தோசயனிடின்கள் போன்ற அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இவை, சிறுநீர் பாதையின் சுவர்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்வதைத் தடுக்க உதவுகிறது. இவை ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்தையும் ஆதரிக்கின்றன.

எலுமிச்சை: சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை பழம் சிறுநீரக கற்களை கரைக்கிறது. தினசரி ஒரு கிளாஸ் எலுமிச்சை பழச்சாறு குடிப்பதால், சிறுநீர் சிட்ரேட் அதிகரித்து, சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. மேலும், சிறுநீர் பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அட்டகாசமான 8 முக்கிய குறிப்புகள்!

ஆப்பிள்: ஆப்பிளில் உள்ள பெக்டின் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இதனால், சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் வீக்கத்தை குறைக்கிறது.

மாதுளை: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும் மற்றொரு பழம் மாதுளை. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிறுநீரகங்களை சுத்தப்படுத்தி அதன் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதாக தெரியவந்துள்ளது.

தர்பூசணி: அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணியில் நச்சக்களை நீக்கும் தன்மை அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி சிறுநீரகத்தை நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவி செய்கிறது

இலவங்கப்பட்டை உண்மையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா? உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.