ETV Bharat / health

தாவரங்களில் இருந்து தாய்ப்பாலா? - கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு! - Breast Milk From Plants - BREAST MILK FROM PLANTS

Breast Milk From Plants: நிகோடியானா பெந்தமியானா என்னும் புகையிலை தாவரங்களில் இருந்து, மனித பால் ஒலிகோசாக்கரைடுகளை உருவாக்க முடியும் என கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்.

கோப்பு படம்
கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 2:57 PM IST

சென்னை: பாலூட்டி உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் தாய்ப்பால் மிகச்சிறந்த கவசமாக இருக்கிறது. இதில் மனித இனமும் விதிவிலக்கல்ல. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளன. உலகளவில் 75 சதவீத தாய்மார்கள் பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கிறார்கள். தாய்ப்பாலில் தோராயமாக 200 மனித பால் ஒலிகோசாக்கரைடுகள் (HMO - Human milk oligosaccharides) என்னும் சிக்கலான சர்க்கரைகள் உள்ளன.

இந்த ஒலிகோசாக்கரைடுகளை தாய்ப்பாலின் முக்கியமான கூறு எனலாம். இவை வளரும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. முக்கியமாக குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கின்றன. மேலும், குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகின்றன. ஆனால், இந்த ஒலிகோசாக்கரைடுகளை பெரிய அளவில் உற்பத்தி செய்வது என்பது சவாலாக இருப்பதாக உலக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நோய்களை கண்டறிய இனி சிறுநீர் பரிசோதனை தேவையில்லை! இதிலும் புகுந்த செயற்கை நுண்ணறிவு! - AMRX Software

இந்த நிலையில், இந்த சவாலை எதிர்கொள்ளும் முயற்சியில் கலிபோர்னியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் இறங்கினர். ஆராய்ச்சிக்கு நிகோடியானா பெந்தமியானா என்னும் புகையிலை தாவரங்களைப் பயன்படுத்தி, அவற்றில் மரபணுக்களை புகுத்தினர். இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட நிகோடியானா பெந்தமியானா தாவரங்கள், மனித பால் ஒலிகோசாக்கரைடுகள் (HMO) எனப்படும் சிக்கலான சர்க்கரைகளை உற்பத்தி செய்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தாவரங்களை மனித பால் ஒலிகோசாக்கரைடு (HMO) உற்பத்திக்கு அவசியமான நொதிகளின் வெளியீட்டை தூண்டுவதன் மூலம் மனித பால் ஒலிகோசாக்கரைடுகளை உருவாக்க முடிந்தது. தாவரங்கள் மூலம் மனித பால் ஒலிகோசாக்கரைடு உற்பத்தி செய்வதற்கான புதுமையான முயற்சி, உயிரி தொழில்நுட்பத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு அதிக சத்தான மற்றும் செலவு குறைந்த பாலை எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு வழிவகுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: செயற்கை கருத்தரித்தல் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு மனநல பிரச்னைகளா? - ஆய்வு கூறுவது என்ன? - Mental issues on child born by IVF

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.