ETV Bharat / health

இவற்றை ஒன்றாக சாப்பிட்டால் வெயிட் அதிகரிக்குமாம்...எடையை குறைக்க நினைப்பவர்கள் உஷார்! - FOODS TO AVOID FOR WEIGHT LOSS

எடை இழப்பிற்கு முயற்சி செய்பவர்கள் இந்த உணவுகளை ஒன்றாக சாப்பிட்டால் எடை இழப்பிற்கு பதிலாக எடை அதிகரிக்கும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர். எடை இழப்பிற்கு ஒன்றாக சாப்பிடக்ககூடாத உணவுகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Health Team

Published : Nov 2, 2024, 1:13 PM IST

இன்றைய காலத்தில் வயது வித்தியாசமின்றி பலர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று அதிக எடை. குறிப்பாக மாறிய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாமை, மன அழுத்தம், தூக்கமின்மை, அலுவலகங்களில் நீண்ட நேரம் அமர்ந்து பணி புரிவது போன்றவை எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

இந்நிலையில், எடையை குறைக்க பலரும் டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றுகின்றனர். ஆனால், இவை மட்டும் எடையை குறைக்காது என்றும் நாம் சாப்பிடும் உணவில் சிலவற்றை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்த்தால் தான் எடை குறையும் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லஹரி சுரபனேனி. அந்த உணவுகள் என்னென்ன? என்பதை பார்க்கலாம்..

ஓட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களில் பெரும்பாலானோர் காலை உணவாக ஓட்ஸை தொடர்ந்து சாப்பிடுவார்கள். இதற்கு காரணம், ஓட்ஸில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது தான். இருப்பினும், சிலர் ஓட்ஸுடன் உலர் பழங்களை ஒன்றாக எடுத்துக்கொள்கிறார்கள்.

புரதம் அதிகளவில் இருப்பதால், இரண்டையை ஒன்றாக சாப்பிடுகிறார்கள். ஆனால், இவற்றை ஒன்றாக உட்கொள்வதால் உடல் எடை குறைக்கும் வாய்ப்பு குறைந்து, எடை அதிகரிக்க வழிவகுக்கிறது. மேலும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

சாதம் மற்றும் உருளைக்கிழங்கு: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடக்கூடாத மற்றொரு உணவுக் கலவை இது. காரணம், உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது உடல் எடை கூடும் வாய்ப்பு உள்ளது. அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. இவற்றை தனித்தனியாக சிறிய அளவில் எடுத்துக் கொள்ளும்போது ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பரிந்துரைக்கப்படுகிறது.

ஸ்நாக்ஸ் மற்றும் பானங்கள்: பலருக்கும் குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், இவற்றில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை அளவு உடல் எடையை அதிகரித்து அஜீரண பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. இந்த நிலையில், குளிர் பானங்களுடன் எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ் சாப்பிடும் போது எடை அதிகரிக்கும். அதனால் தான் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கலவையிலிருந்து விலகி இருப்பது நல்லது.

இவற்றையும் தவிர்க்கவும்: இந்த உணவுக் கலவைகளைத் தவிர்ப்பது மட்டுமின்றி வேறு சில உணவுகளையும் தவிர்ப்பது உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. முடிந்தவரை நொறுக்குத் தீனிகள், எண்ணெய் உணவுகள், பொரித்த உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், பானங்கள் மற்றும் டிரான்ஸ் ஃபேட் அதிகம் உள்ள உணவுகளிருந்து விலகி இருப்பது நல்லது.

இதையும் படிங்க:

உடல் எடையை குறைக்கும் 3 சூப்பர் டீடாக்ஸ் டிரிங்ஸ்..எப்படி குடிக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க!

தொங்கும் தொப்பை-ஐ குறைக்க வெள்ளை பூசணி ஜூஸ்..எப்படி குடிக்கணும் தெரியுமா?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.