ETV Bharat / health

ஓரினச் சேர்க்கையாளர்களை அதிகம் பாதிக்கும் குரங்கம்மை? - மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்? - MONKEY POX SYMPTOMS

author img

By ETV Bharat Health Team

Published : Aug 27, 2024, 4:22 PM IST

MONKEY POX SYMPTOMS: ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கும், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் குரங்கம்மை நோய்த்தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ளதாக ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு குரங்கம்மை குறித்து அளிக்கப்பட்ட பயிற்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரின சேர்க்கையாளர்கள் கோப்புப்படம்
ஓரின சேர்க்கையாளர்கள் கோப்புப்படம் (Credit - Getty Images)

சென்னை: குரங்கு அம்மை நோய்த்தொற்று பரவல் (Mpox) குறித்து சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், குரங்கம்மையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

குரங்கு அம்மை நோய் என்றால் என்ன? குரங்கு அம்மை நோய் என்பது குரங்கு அம்மை வைரஸ் கிருமியால் வரும் தொற்று நோயாகும். இந்த தொற்று முதன்முதலில் 1958ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குரங்கு அம்மை நோய், ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதையடுத்து, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிவித்தது.

குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது? ஒரு பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து நெருங்கிய தொடர்பு மூலம் சுவாசத் துளிகள், ரத்தம், உடல் திரவங்கள் அல்லது தோளில் உள்ள குரங்கு அம்மை புண்களுடன் தொடர்பு வாயிலாக பரவுகிறது.

நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் உள்ள நபர்கள் யார்? ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் (ஓரினச் சேர்க்கையாளர்), பாலியல் தொழிலாளர்கள், பலருடன் உடலுறவு கொள்ளும் நபர்கள், சுகாதாரம் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களுக்கு நோய்த்தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கர்ப்பிணிகள் பாதுகாப்பு: கர்ப்பிணிகள் தங்களின் வயிற்றில் உள்ள கருவிற்கு வைரஸை பரப்பவும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை இந்த நோய் தாக்கினால் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாகும்.

குரங்கம்மை அறிகுறிகள் என்ன? காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, தொண்டை வலி, தோலில் தடிப்பு மற்றும் கொப்பளங்கள், அரிப்பு அல்லது வலி, தசை வலி, உடல் சோர்வு போன்றவையாகும். மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின், உடனே அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நோய்த்தொற்றை எவ்வாறு உறுதி செய்வது? அறிகுறிகள் உள்ள நபர்களின் ரத்தம், சிறுநீர், கொப்பளத்தின் நீர், பக்கு, மூக்கு மற்றும் தொண்டையில் எடுக்கப்படும் swab போன்ற மாதிரிகள் முழு பாதுகாப்புக் கவசம் அணிந்த ஆய்வக நுட்புணரால் சேகரிக்கப்படும். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் கிண்டியில் உள்ள King Institute வைரஸ் ஆராய்ச்சி பிரிவிற்கும், புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டு நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது.

குரங்கு அம்மை நோயை தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? வருமுன் காப்போம் என்பதற்கு இணங்க, பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பைத் தவிர்க்கவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தவும், புண்களை தொடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். நோயாளிகளைக் கையாளும் மருத்துவப் பணியாளர்கள் நோய்த் தடுப்பு உபகரணங்களை உடுத்திக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன?

  • நோயாளிகளை தனிமைப்படுத்துதல்.
  • தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ளுதல்.
  • அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்தல்.

இதையும் படிங்க:

உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா? இது டெங்குவாக கூட இருக்கலாம்..உடனே செக் பண்ணுங்க!

"பெரியம்மை வகையைச் சார்ந்த குரங்கம்மைக்கும் அதே சிகிச்சை தான்" - மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.