ETV Bharat / health

இதயம் காப்போம் திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் பேர் பயனடைவு - பொது சுகாதாரத்துறை தகவல்! - World Heart Day

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 ஆயிரத்து 474 நபர்கள் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் 613 நபர்கள் பயனடைந்துள்ளனர் என பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

கோப்பு படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)

சென்னை: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உலக அளவில் இதய நோய் காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் வயதில் உள்ளவர்களுக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சமம்.

இது குறித்தான விழிப்பணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி (இன்று) உலக இதயக் கூட்டமைப்பு சார்பில் உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 கோடியே 70 லட்சம் மக்கள் இருதய நோயினால் இறக்கின்றனர். இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31 சதவீதம் ஆகும். மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை இருதய கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.

இதய நோய்க்கான காரணிகள்: உலக இதய தினத்தில் இந்த ஆண்டின் கருப்பொருள் இதயம் சார்ந்து செயல்படுங்கள் என்பதாகும். இதன் பொருள் நாம் நமது இதய பாதிப்புகளுக்கான காரணிகளை தவிர்த்து, தமது வாழ்க்கை முறையை மேம்படுத்தினால், இதய நோய்களை தவிர்க்க முடியும் என்பதாகும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய். முறையற்ற உணவு உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: பொது சுகாதார மற்றும் நோய் தடுப்புத் துறையின் சார்பாக இதய நோய் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாடு அரசின் முதன்மை திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் முதலமைச்சரால் 2021 ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த திட்டத்தில் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று இதய நோய் பாதிப்புகளுக்கு முக்கிய கரணியாக விளங்கும் பொதுவான தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, நோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கான மருத்துகள் அவர்களின் இல்லங்களிலேயே வழங்குதல், மேல் சிகிச்சைக்கான பரிந்துரை போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து செப்டம்பர் 22ஆம் தேதி வரையில் வரை மாநில அளவில் 1 கோடியே 94 லட்சம் 97 ஆயிரம் 544 பயனாளிகள் முதன்முறை சேவைகளை பெற்றுள்ளனர். மேலும் 4 கோடியே 15 லட்சத்து 57 ஆயிரத்து 660 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் தொடர் சேவைகளை பெற்று வருகின்றனர்.

இதயம் காப்போம் திட்டம்: மேலும் இருதய நோயினால் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிரிழப்பினை தடுக்கும் பொருட்டு இதயம் காப்போம் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டு இருதய நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு நோய் உறுதி செய்யப்பட்டு சிறப்பு மருத்துவரின் ஆலோசனைப்படி இருதய பாதுகாப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: இன்று உலக இதய தினம்! இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி? - World Heart Day 2024

இத்திட்டத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 ஆயிரத்து 474 நபர்கள் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் 613 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் இதய நோய் பாதிப்புகளுக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கும் உடற்பயிற்சியின்மையை கருத்தில் கொண்டு ‘நடப்போம், நலம் பெறுவோம்’ என்பதற்கிணங்க, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் கொண்ட சுகாதார நடைபாதை கண்டறியப்பட்டு, நடைபயிற்சி, தொற்றா நோய், இதய நோய் மற்றும் சுகாதார விழிப்புணர்வு கொண்ட வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு செப்டம்பர் மாதம் வரை 8 கிலோ மீட்டர் சுகாதார நிலைய பாதையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புகையிலை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் புகையிலை கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.

இதுபோன்று இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கிய காரணிகனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தும் விதமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் இதய நோய் பாதிப்புகளின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க வழிவகை செய்கிறது. இந்த உலக இதய நாளில் நாமும் நமது இதயம் சார்ந்து செயல்பட்டு மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம் என உறுதி ஏற்போம்” என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.