ETV Bharat / health

கர்ப்ப காலத்தில் பாலை பார்த்தாலே வாந்தி வருகிறதா? கர்ப்பிணிகள் பால் குடிப்பதன் அவசியம் என்ன?

கர்ப்பிணி பெண்கள் பால் குடிப்பது அவசியமா? அதனால், கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

author img

By ETV Bharat Health Team

Published : 3 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)

குழந்தை மற்றும் தாய் ஆரோக்கியமாக இருக்க கர்ப்ப காலத்தில் சரிவிகித உணவை பெண் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதிலும், புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியுள்ள பாலை கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால், கர்ப்ப காலத்தில் இருக்கும் பல பெண்களுக்கு பாலை பார்த்தாலே குமட்டல் ஏற்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், பாலில் உள்ள சத்துக்களை கர்ப்பிணிகள் பெறுவது எப்படி என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லதாஷாஷி. அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

"கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சமச்சீர் உணவு மிகவும் முக்கியமானது. ஆனால், கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, சுவை, வாசனை முற்றிலுமாக மாறுபடுகிறது.

இதனால் சிலருக்கு சில உணவுகள் பார்த்தாலே பிடிக்காது, ஏன் உடல் ஒவ்வாமை கூட ஏற்படுகிறது. இதனால், வாந்தி, வாயு போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பால் குடிக்க பிடிக்காத கர்ப்பிணிகள் முற்றிலுமாக பாலை நிறுத்துகின்றனர். இப்படி செய்யாமல், இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் பால் எடுத்துக்கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்" என்கிறார் மருத்துவர்

'கர்ப்ப காலத்தில் பால் மற்றும் பால் பொருட்களை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மூலம் குழந்தைக்கும் பெண்களுக்கும் அனைத்து சத்துக்களும் கிடைக்கும். பால் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை வழங்குகிறது. கால்சியம், வைட்டமின்-டி, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்களை வழங்குகிறது. கர்ப்ப காலத்தில், தினமும் 400-600 மில்லி பால் , 100 மில்லி தயிர் மற்றும் 30 கிராம் பனீர் எடுத்துக் கொள்ளலாம்' என்றார்

வெறும் பாலை குடிக்க முடியாவிட்டால், ஏலக்காய், மஞ்சள், மிள்கு போன்றவற்றை சேர்த்துக் குடிக்கலாம். மேலும், ஃப்ரூட் கஸ்டர்ட், பான்கேக் போன்றவற்றில் பால் சேர்க்கப்படுவதால் இந்த மாதிரியாகவும் எடுத்துக்கொள்ளலாம். வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் குளிர்ந்த பால் குடிப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் பால் குடிப்பதன் மூலம், தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்க தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என்றார்.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.