மனிதனின் உடல் உறுப்புகள் நல்லப்படியாக இயங்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை (Fatty Liver) மிகவும் பொதுவானதாக மாறியுள்ளது. இதனால், பெரியவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாதிரியான சூழ்நிலையில், கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு நிவாரணமாக நெல்லிக்காய் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? கல்லீரல் செயல்பாட்டிற்கு நெல்லிக்காய் நன்மை பயக்குவதோடு ஹைப்பர்லிபிடெமியா மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியைத் தணிப்பதாகவும் அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் (NIH) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க நெல்லிக்காய் பயன்படுத்தி செய்யப்பட்ட டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ் உதவியாக இருக்கிறது. அது என்ன? அதனை எப்படி தயார் செய்வது? பயன்படுத்துவது எப்படி? என்பதை பார்க்கலாம்.
கல்லீரல் டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ் தயாரிப்பது எப்படி: 4 நெல்லிக்காயை கொட்டைகள் நீக்கி சிறியதாக நறுக்கி வைக்கவும். பின், 3 முதல் 4 டீஸ்பூன் சோற்று கற்றாழை ஜெல் எடுக்கவும். அடுத்ததாக, 1 கொத்து கொத்தமல்லியை எடுக்கவும்.
இப்போது, ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்து பொருட்களை சேர்த்து 100 மி தண்ணீர் ஊற்றி அரைத்து ஒரு கிளாஸில் வடிகட்டவும். எடுத்து வைத்துள்ள சாற்றில், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
எப்போது/எப்படி பருகலாம்? : தினசரி காலை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், அல்லது உணவருந்திய ஒரு மணி நேரத்திற்கு பின் பருகலாம். இந்த ட்ரிங் எடுத்துக்கொண்ட ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு குடித்து வரலாம். இதனுடன், மரு அருந்துதல், புகைப்பிடித்தல், உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
பயன்கள்:
- கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். உடலில் ஆங்காங்கே தேங்கியுள்ள கொழுப்புகளை நீக்கும்.
- வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கற்றாலை, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- செரிமானத்தை மேம்படுத்துவதோடு, இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதை கொத்தமல்லி தடுக்கிறது.
- மஞ்சளில் உள்ள குர்குமின், கல்லீரலில் உள்ள கொழுப்புகளை வெளியேற்றி சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் 3 சூப்பர் டீடாக்ஸ் டிரிங்ஸ்..எப்படி குடிக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க! மது குடிக்காதோருக்கும் வரலாம் கல்லீரல் பாதிப்பு…மருத்துவர்கள் சொல்வது என்ன? |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்