ETV Bharat / health

மறந்தும் கூட வாய் வழியாக சுவாசிக்காதீர்கள்..அபாயங்கள் எக்கச்சக்கம்!

பல நேரங்களில் நாம் தெரிந்தோ தெரியாமலோ மூக்கிற்கு பதிலாக வாய் வழியாக சுவாசிப்பதால் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா?

author img

By ETV Bharat Health Team

Published : Oct 11, 2024, 11:59 AM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)

மூக்கிற்கு பதிலாக வாய் வழியாக சுவாசித்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மனித உடலியல் வடிவமைப்பின் படி, நமது மூக்கு மற்றும் வாய் வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூக்கு மற்றும் வாயின் செயல்பாடுகள்: மூக்கு மற்றும் வாய், இந்த இரண்டின் செயல்பாடுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. மூக்கு வழியாக நாம் உடலின் செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறோம், அதே நேரத்தில் வாய் வழியாக உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்கிறோம். மூக்கின் முக்கிய செயல்பாடு அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் இல்லாமல் சுவாசிக்க உதவுகிறது, அதே நேரத்தில் வாய் உணவை வயிற்றில் நுழைய அனுமதிக்கிறது மற்றும் உமிழ்நீர் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

வாய் வழியாக சுவாசித்தால் என்ன நடக்கும்?: வாய் வழியாக சுவாசிப்பது முகத்திலுள்ள எலும்புகளின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், மூக்கு வழியாக சுவாசிப்பதை விட வாய் வழியாக சுவாசிப்பது உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தும், இதன் காரணமாக செல்களுக்கு செல்லும் ஆக்ஸிஜன் விநியோகம் பாதிக்கப்படலாம் மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். கூடுதலாக, வாய் வழியாக சுவாசிப்பது விரைவில் முதுமை தோற்றத்திற்கு வழிவகுக்கின்றது.

மூக்கின் வழியாக சுவாசியுங்கள்: நாம் சாப்பிடுவதற்கு வாயைப் பயன்படுத்துவதைப் போலவே, மூக்கை சுவாசிக்க பயன்படுத்துகிறோம். காற்றில் உள்ள மாசுக்களை வடிகட்டுவதற்கு சிலியா என்ற சிறப்பம்சம் நமது சுவாசப் பாதையில் உள்ளது.

சிலியா என்றால்?: இது, செல்களில் மேற்பரப்பில் காணப்படும் முடி போன்ற, ஊசிமுனையை விட சிறய அமைப்பு. நமது சுவாசக்குழாயில் உள்ள மியூகோசா எனப்படும் சளி சவ்வில் இந்த சிலியா ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. இவை, நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசு துகள்களை வெளியே தள்ளுகிறது.

மூக்கடைப்பு நேரத்தில் என்ன செய்வது?: சில சமயங்களில் சளி, இருமல் மற்றும் மூக்கு அடைப்பு காரணமாக, நாம் வாய் வழியாக சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்படி, அவசரமான சூழ்நிலையில் மட்டும் வாய் வழியாக மூச்சு விட பரிந்துரைக்கப்படுகிறது. வாய் வழியாக திட மற்றும் திரவ உணவுகள் நுழைகின்றன. வாய்ப்பகுதியில் உள்ள மியூகோசா உணவில் வழியாக நுழையும் கிருமிகளை மட்டும் தடுக்கும். இதில், காற்றை வடிகட்டும் சிலியா இல்லை.

நாசி ஸ்ப்ரே பயன்படுத்துவது, தினமும் மூச்சுப் பயிற்சி செய்வது, ஒரே பக்கமாக தூங்குவது போன்ற பழக்கங்கள் வாய் வழியாக சுவாசிக்கும் பழக்கத்தை தடுக்க உதவுகிறது.

இதையும் படிங்க:

சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கும் சுவாசப் பிரச்சனை! அச்சுறுத்தும் PM 2.5

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.