ETV Bharat / health

'என் ஆசை கொத்தமல்லியே'..இரு வாரங்கள் வரை கொத்தமல்லியை கெட்டுப்போகாமல் வைத்திருப்பது எப்படி? - Tips to store Coriander leaves - TIPS TO STORE CORIANDER LEAVES

Tips to store Coriander leaves without fridge: கொத்தமல்லி இலையை ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே இரு வாரங்கள் வரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)
author img

By ETV Bharat Health Team

Published : Aug 26, 2024, 1:47 PM IST

ஐதராபாத்: காய்கறி சந்தையிலிருந்து நாம் பல விதமான காய்கறிகளை வாங்கினாலும் கடைசியாக 'கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி கொடுங்க' என கேட்டு வாங்கி வருவது பலருக்கும் மன திருப்தியை தருகிறது. அப்படி, நாம் ஆசையாக வாங்கி வரும் கொத்தமல்லியை தினமும் செய்யும் உணவில் சேர்க்க வேண்டும் என நினைக்கும் போது, சில நேரங்களில் வாங்கி வந்தே அன்றே கெட்டுவிடுகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு இருக்கா என்றால் இருக்கிறது. நாம் செய்யும் சில தவறுகளை மாற்றுவதன் மூலம் இரு வாரங்கள் வரை கொத்தமல்லியை கெட்டுப்போகாமல் பயன்படுத்த முடியும். அவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கொத்தமல்லியை கழுவுவதில் கவனம் தேவை: கடையிலிருந்து கொத்தமல்லியை வாங்கி வந்தவுடன் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைத்து அதனை கழுவி நாம் ஸ்டோர் செய்வதுண்டு. இதனால், கொத்தமல்லி சில மணி நேரங்களிலே கெட்டு விடுகிறது. காரணம், கொத்தமல்லி கழுவிய உடனேயே பயன்படுத்தக்கூடிய மூலிகை.

அதனால், கழுவிய பிறகு ஸ்டோர் செய்தால் அது கெட்டுவிடும். இதற்கு தீர்வு என்னவென்றால், கொத்தமல்லியை உபயோகிக்கும் முன்னர் கழுவி பயன்படுத்த வேண்டும்.

கொத்தமல்லி தண்டுகளை தண்ணீரில் வையுங்கள்: ஒரு டம்ளரில் தண்ணீர் நிரப்பி, கொத்தமல்லியின் தண்டு தண்ணீரில் படும்படி வைக்க வேண்டும். இப்படி, செய்வதால் கொத்தமல்லி காய்ந்து போகாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. குறிப்பு: இந்த தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும்.

வெயிலை தவிர்க்கவும்: கொத்தமல்லி எப்போதும் நிழலில் இருப்பதை உறுதி செய்யுங்கள். வெயிலில் வைத்தால் இலைகள் சீக்கிரமாக வாடிவிடுகிறது. அத்துடன் தண்ணீர் சூடானால் மல்லி இலை அழுகுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனல், நிழலில் வைப்பதன் மூலம் கொத்தமல்லி நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. மேலும், அதன் மூலக்கூறுகளும் பாதுகாக்கப்படுகிறது.

ஈரமான துணியில் சுற்றவும்: கொத்தமல்லி கெட்டுப்போகாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்க, கொத்தமல்லி இலைகளை ஈரமான துணியில் அல்லது ஈராமான டிஷ்யூ பேப்பரில் சுற்றி வைக்கவும். குறிப்பு: வேர்களை நீக்கக்கூடாது.

அற்புதம் செய்யும் மஞ்சள்: கொத்தமல்லியின் வேர்களை நன்றாக நீக்கிவிடவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியை சேர்த்து நன்றாக கலந்து விடவும். அந்த நீரில், கொத்தமல்லி இலைகளை அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து, ஈரம் இல்லாமல் உலர்த்திக் கொள்ளுங்கள்.

உலர்ந்த பின்னர், ஒரு டப்பாவில் துணியை வைத்து, அதில் இலைகளை வைத்து நன்றாக பூட்டி ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம், இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை கொத்தமல்லி கெடாமல் இருக்கிறது.

இதையும் படிங்க:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.