ஹைதராபாத்: நமது உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையில் மாற்றம் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாயுத்தொல்லையை அனுபவிக்கின்றனர். தற்காலிகமாக வாயுத்தொல்லையை போக்க அதிக வழிகள் இருந்தாலும், நிரந்தரமாக இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? வயிறு இப்படி இருப்பதற்கு காரணம் என்ன? இயற்கையாகவே இந்தப் பிரச்சனையைக் குறைப்பது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் பிரபல அறுவை சிகிச்சை இரைப்பை குடல் மருத்துவர் டி. லட்சுமி காந்த்..
வாயு ஏற்படுவது எப்படி?: அவசர அவசரமாக சாப்பிடும் போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, டீ,காபி மற்றும் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியமாலேயே, நாம் காற்றை விழுங்குகிறோம். இந்த காற்று தான் 80% ஏப்பமாகவும், மீதி ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.
வயிறு உப்புசமாகத் தோன்றுவதற்குப் பல காரணிகள் உள்ளன. முக்கியமாக, சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருப்பது, கார்பனேற்றப்பட்ட பானங்கள் குடிப்பது, ஸ்ட்ராவை பயன்படுத்துவது போன்றவற்றால் இந்தப் பிரச்சனை எழுகிறது. பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதால் சிலருக்கு மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொல்லை உண்டாக்குகிறது." - டாக்டர் டி. லட்சுமி காந்த்
வாயுத்தொல்லை நீங்க சில டிப்ஸ்:
- வாயுப் பிரச்சனை உள்ளவர்கள் உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்
- பழுக்காத பழங்களை சாப்பிடாதீர்கள்
- புதினா டீ குடிப்பது நல்ல பலனைத் தரும்
- சாப்பிடும் போது பேசக்கூடாது
- அதிக தண்ணீர் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் செரிமான சரியாக நடக்கும்
- குளிர்பானங்கள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது
- இளநீர் மற்றும் ஜூஸ் வகைகளை ஸ்ட்ரா (Straw) மூலம் குடிப்பதை தவிருங்கள்
- சிலருக்கு ப்ரோக்கோலி, கீரை வகைகள் சரியாக ஜீரணமாகாது. அதனால், செரிமானத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் உணவுகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்
- சுயிங்கம் மெல்வது வாயுவை உண்டாக்கும்
- இரவில் சரியாக தூங்காததாலும் வயிறு உப்புசம் ஏற்படும். சரியாக தூங்குவது மிக முக்கியம்
- மன அழுத்தம் மற்றும் அதிக சிந்தனை வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்