ஹைதராபாத்: சர்வதேச அளவில் மகளிர் தினம், ஆண்கள் தினம் கொண்டாடப்படுவதை போல, உலகெங்கிலும் உள்ள தாடி விரும்பிகள் ஒன்று கூடி தங்கள் தாடியை கொண்டாடுவதற்கான நாள் தான் 'உலக தாடி தினம்'. இந்த தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்கள் மீது ஆண்களே பொறாமைப் படும் அளவுக்குத் தாடியின் மீதான காதல் அதிகரித்துவிட்டது என்றால் மிகையில்லை. ஆனால் சிலருக்குத் தாடி வளராமலும், சிலருக்கு நன்றாக வளர்ந்தாலும் எப்படி பராமரிப்பது என்று தெரியாமலும் இருக்கிறது? இதற்கு என்ன தான் தீர்வு?..இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தாடி-ஐ வளர்க்க என்ன செய்யலாம்?:
புரோட்டீன் நிறைந்த உணவுகள்: உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருந்தால் தாடி வளர்ச்சியில் பிரச்சனை இருக்காது. இதற்கு முக்கியமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக, முட்டை, மீன், பால், பீன்ஸ் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகளை உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
விளக்கெண்ணெய் மசாஜ்: தாடி அடர்த்தியாக வளர்வதற்கு மற்றொரு மிக எளிதான வழி விளக்கெண்ணெய் மசாஜ். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை நன்கு மசாஜ் செய்து கழுவுங்கள்.
ட்ரிம் செய்வது அவசியம்: தாடியை வலுவாக அடர்த்தியாக வளர்க்க தாடியை ட்ரிம் செய்வது மிகவும் முக்கியம். தாடியை வளர்க்க தொடங்கும் போது, முதல் முறை அனுபவமிக்க நிபுணர்களிடம் சென்று வடிவமைத்துக்கொள்ளுங்கள். அடுத்தமுறையில் இருந்து நீங்களே ட்ரிம் செய்து கொள்ளலாம்.
Beard மாஸ்க்: கற்றாழை ஜெல், ரோஸ்மேரி ஆயில் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவற்றை கலந்து தாடியில் தடவி 10 நிமிடங்களுக்கு பின் கழுவினால் தாடி நன்றாக வளரும்.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்: டெஸ்டோஸ்டிரோம் என்ற ஆண்களுக்கான ஹார்மோன் குறைவாக இருந்தாலும் முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். காரணம், இந்த ஹார்மோன்கள் தான் முடி வளர்ச்சியை கட்டுப்பாடில் வைத்துக்கொள்ளும். முட்டை, மீன், வேர்க்கடலை போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம்: மன அழுத்தம் அதிகமாக இருந்தால், தாடி வளர்வதில் தடை ஏற்படுவது மட்டுமல்லாமல், முடி நரைக்கவும் தொடங்கிவிடுகிறது.
தாடியை பராமரிப்பதற்கான சில டிப்ஸ் இதோ:
- வாரத்திற்கு 2 -3 முறை உங்கள் தாடியை கழுவுங்கள்
- மாய்ஸ்ரைஸ் செய்யுங்கள்
- அவ்வப்போது ட்ரிம் செய்ய மறக்காதீர்கள்
- கழுத்து பகுதியிலும் கவனத்தை செலுத்துங்கள்
- தாடியை ட்ரிம் அல்லது வெட்டுவதற்கு சரியான கருவியை தேர்ந்தெடுங்கள்
- அடிக்கடி தாடியை தொடுவதைத் தவிர்க்கவும்
தாடி ஆரோக்கியத்திற்கு நல்லது: சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 95% வரை பாதுகாப்பதாக ஆய்வு கூறுகிறது. மேலும், தோல் புற்றுநோய் மற்றும் சூரிய ஒளியில் இருந்தும் பாதுகாக்கிறது என்கிறது ஆய்வு.
முதிர்ச்சியை மறைக்கிறது: தாடியை நன்றாக வளர்த்து பராமரிப்பதன் மூலம் முகம், தலை மற்றும் கழுத்தில் தோன்றும் வயதான அறிகுறிகளை மறைத்து இளமையாக காட்ட உதவுகிறது.
இதையும் படிங்க: முடி உதிர்கிறதா? நீங்கள் சாப்பிடும் உணவில் இது இல்லாததே முக்கிய காரணம்!