சென்னை: குழந்தைகள் தங்களின் அதிருப்தி, கோபம் அல்லது விரக்தியை வெளிப்படுத்தும் பொழுது உதட்டை பிதுக்குவார்கள். ஒரு காலத்தில் குழந்தைகளின் விஷயமாக இருந்த உதட்டை பிதுக்கும் செயல், இப்போது செல்ஃபி, ஃபேஷன் என வேறு வடிவங்களை எடுத்து வருகிறது. நேஷனல் கிரஷ் என புகழப்படும் ராஷ்மிகா மந்தனா ஸ்மைலி பொம்மைகளைப் போன்று விதவிதமான முகபாவனைகளால் அசத்துவார்.
இவ்வாறு முகபாவனைகளை மாற்றுவதை ஆங்கிலத்தில் POUT என குறிப்பிடுகிறார்கள். நண்பர்களுடன் செல்ஃபி எடுப்பது முதல் உங்கள் அன்புக்குரியவருடன் செல்ஃபி எடுக்கும் போதும் விதவிதமான POUT-கள் மூலம் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். எந்த POUT அதாவது உதட்டுக்குவிப்புக்கு என்ன பொருள் என்பதை விரிவாகக் காணலாம்.
வாத்து முக பௌட் (Duck Face Pout): வாத்து முகம் (Duck Face) போன்ற போஸ் பிரபலமான ஒன்றாகும். உங்கள் உதடுகளை நன்றாக வெளியே குவித்துக் கொள்ளுங்கள். தற்போது கன்னங்களை இருபக்கமும் நன்றாக உள்ளே உறிஞ்சுங்கள். உங்கள் கண்களை அகலமாகத் திறந்து வைத்து வாத்து முகம் (Duck Face Pout ) போஸை கொடுக்கவும். நண்பர்களுடன் இருக்கும் போது, விளையாட்டுத்தனமான முகபாவத்தை இந்த Pout வெளிப்படுத்தும்.
சாஃப்ட் பௌட் (Soft Pout): சாஃப்ட் பௌட் தோற்றம் பொதுவான செல்ஃபிகளுக்கு சிறந்த ஒரு போஸ் ஆகும். சாஃப்ட் பௌட் போஸ், உங்களுடைய அப்பாவித்தனம் அல்லது ஏக்கத்தை வெளிப்படுத்தும். உங்கள் முகத்தை நிதானப்படுத்தி, உங்கள் உதடுகளை பிரிக்கவும். உங்கள் மேல் உதட்டை விட சற்று அதிகமாக உங்கள் கீழ் உதட்டை வெளியே தள்ளுங்கள். அப்பாவித்தனம் கலந்த கண்களோடு சாஃப்ட் பௌட் போஸ் கொடுக்கவும்.
சப்டில் பௌட் (Subtle Pout): சப்டில் பௌட் இயற்கையான தோற்றத்திற்கு சிறந்த ஒரு போஸ் ஆகும். இந்த பௌட் தினசரி புகைப்படங்களுக்கும், சாதாரண செல்ஃபிகளுக்கும் ஏற்றது. உங்கள் முக தசைகளை தளர்த்தவும். உங்கள் உதடுகளை சிறிது பிரித்து வெளியே தள்ளவும். உங்கள் பார்வையை மென்மையாக்குங்கள். இந்த போஸ் அதிக எக்ஸ்பிரஷன் இல்லாமல், உங்கள் உதடுகளுக்கு சரியான அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது. மிகவும் இயற்கையான தோற்றத்திற்கு இது சரியானதாக அமைகிறது.
பிளேஃபுல் பவுட் (Playful Pout): நீங்கள் மிகவும் வேடிக்கையான மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்ட நபராக இருந்தால் பிளேஃபுல் பவுட்டை தேர்வு செய்யலாம். இந்த பிளேஃபுல் பவுட் போஸ் உங்கள் ஆளுமையைக் காட்டுவதற்கு சிறந்ததாக இருக்கும். உங்கள் உதடுகளை முன்னோக்கி தள்ளி, உங்கள் கன்னங்களை உப்பிக் கொள்ளவும். உங்கள் புருவங்களை உயர்த்தி, கண்களை விரிவுபடுத்துங்கள். மேலும் ஈர்ப்பு சேர்க்க நீங்கள் ஒரு கண் சிமிட்டல் அல்லது தலையை சாய்க்கலாம். உங்களை சமூகவலைத்தளங்களில் ஃபாலோ பண்ணுபவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்க விரும்பும் பொழுது பிளேஃபுல் பவுட் போஸ் சரியானதாக இருக்கும்.
லிப் பைட் (Lip bite Pout): லிப் பைட் போஸ் உங்களுக்கு கூச்சம் மற்றும் ப்ளர்ட் (Flirt) பண்ணுவது போன்ற தோற்றத்தை கொடுக்கும். இது பொதுவாக மாடலிங் மற்றும் நடிப்பில் கூச்சத்தையும், ஈர்ப்பையும் வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும். உங்கள் கீழ் உதட்டை விட சற்று அதிகமாக உங்கள் மேல் உதட்டை வெளியே தள்ளுங்கள். உங்கள் கீழ் உதட்டின் ஓரத்தை மெதுவாக கடிக்கவும். ப்ளர்ட் பண்ணுவது போன்ற தோற்றத்தை அதிகரிக்க நுட்பமான பார்வை அல்லது புருவத்தை உயர்த்தவும். இந்த லிப் பைட் பௌட் போஸ் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். இந்த பல்வேறு விதமான பௌட் போஸ்கள் உங்களின் செல்பிக்கு மேலும் ஈர்ப்பு மற்றும் அழகு சேர்க்கும்.
இதையும் படிங்க: குழந்தைப் பேற்றை தள்ளிப்போடும் பெண்கள்.. கருமுட்டை Freeze செய்யும் கலாச்சாரம் வரபிரசாதமா?