ETV Bharat / health

திரும்பத் திரும்ப சாப்பிடத் தோன்றும் ஸ்பானிஷ் ஆம்லெட்..ஈஸியா செய்வது எப்படி? - SPANISH OMELETTE RECIPE - SPANISH OMELETTE RECIPE

SPANISH OMELETTE RECIPE: ஆம்லெட் என்றாலே பலருக்கும் இங்கு எச்சில் ஊறும் தான். ஆனால், எப்பொழுதும் ஒரே வகையான ஆம்லெட்டை சாப்பிடாமல் அதில் கொஞ்சம் உருளைக்கிழங்கை வதக்கி போட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும்? ட்ரை பண்ணி பாருங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 6, 2024, 1:20 PM IST

ஹைதராபாத்: வீட்டில் முட்டை இருந்தால் போதும், நேரம் காலம் பார்க்காமல் ஆம்லெட் போட்டு சாப்பிடுவோம். அதையும் மீறி வெரைட்டியாக சாப்பிட தோன்றினால், பிரட் ஆம்லெட், முட்டை புர்ஜி என செய்து சாப்பிடுவோம். ஏன், சில நேரங்களில் காய்கறிகளில் கூட முட்டையை போட்டு வதக்கி சாப்பிடுவோம்.

ஆனால், நீங்கள் ப்ரேக் பாஸ்டாக முட்டையை சாப்பிட்டது உண்டா? இல்லையென்றால், தினமும் காலையில் எளிதாக செய்யக்கூடிய ஒரு வகையான ஆம்லெட் ரெசிபியை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். அது தான் ஸ்பானிஷ் ஆம்லெட். இந்த வெரைட்டி ஆம்லெட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • முட்டை - 6
  • உருளைக்கிழங்கு - 1
  • வெங்காயம் - 1
  • மிளகு தூள் - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

ஸ்பானிஷ் ஆம்லெட் செய்முறை:

  • முதலில் உருளைக்கிழங்கை தோலுரித்து பொடியதாக நறுக்கவும்
  • வெங்காயத்தை மெல்லியதாகவும் நீளமாகவும் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்
  • அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயில் எண்ணெய் ஊறி சூடாக்கவும்
  • இப்போது எண்ணெய் ஊற்றி, சூடானதும் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்களை போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்
  • அதன் பிறகு வெங்காயத்தை சேர்த்து மேலும் 10 நிமிடங்களுக்கு வதக்கிய பின்னர் அடுப்பை அணைக்கவும்
  • இப்போது மற்றொரு பாத்திரத்தில் 6 முட்டைகளை உடைத்து நன்றாக பீட் செய்யவும்.
  • அதனை தொடர்ந்து,நாம் வதக்கி வைத்திருந்த உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை முட்டையில் சேர்த்து நன்கு கலந்து விடவும்
  • இந்த கலவையில் உங்களுக்கு தேவையான உப்பு, அரை டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • அடுத்ததாக, ஒரு நான்-ஸ்டிக் கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து முட்டை கலவையை ஊற்றவும்.
  • அதன் பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் முட்டையை வேக வைக்கவும். (குறிப்பு: கடாயை மூடி வைக்கவும்)
  • இப்போது மீண்டும் ஆம்லெட்டை புரட்டி போட்டு மூன்று நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும் (குறிப்பு: இம்முறை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை)
  • இப்போது, மிகவும் சுவையான பஞ்சுபோன்ற ஸ்பானிஷ் ஆம்லெட் தயார். இதை தக்காளி கெட்சப் உடல் சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க:

இனி சிக்கன் எடுத்தால் ஹைதராபாத் ஸ்டைல் ​​'க்ரீன் சிக்கன் கறி' செய்து பாருங்கள்..செம ருசி!

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஜோவர் (சோள) ரொட்டி செய்வது எப்படி?...சப்பாத்திக்கு பெஸ்ட் ஆல்டர்னேட்டிவ் இதான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.