ETV Bharat / health

குறை கூறும் மாமியாரை சமாளிப்பது எப்படி? மருமகளுக்கான டிப்ஸ்! - Relationship tips

author img

By ETV Bharat Health Team

Published : 2 hours ago

Relationship tips in tamil: மாமியார் மருமகள் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் பொதுவானவை தான். ஆனால், என்ன செய்தாலும் மாமியார் குறை கூறுகிறார், இவரை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் முழிக்கிறீர்களா? உங்களுக்காக தான் இந்த டிப்ஸ்..டக்குனு ஃபாலோ பண்ணுங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (credits - ETVBharat)

குடும்ப உறவுகளில் இன்றும் மாமியார் மருமகள் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. தாய் மற்றும் மகள்களைப் போல நடந்துக்கொள்ளும் மாமியார் மருமகள்கள் ஒரு புறம் இருந்தால், மறுபுறம் பரம விரோதிகளை போல் நடந்து கொள்ளும் மாமியார் மருமகள்கள் இருக்கின்றனர்.

ஆனால், உண்மை என்னவென்றால் இந்த இரு வகை உறவுகளுக்கு இடையிலும் மோதல்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மாமியார்-மருமகள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். இப்படியான சூழ்நிலையில், குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்? மாமியார் வாக்குவாதம் செய்தால் என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ளலாம்..

பொறுமையாக இருங்கள்: மாமியார் மருமகள் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் பொழுது, ஒரே வீட்டில் இருந்தாலும், மனதளவில் தூரத்தில் இருப்பது சிறந்தது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். உங்கள் மாமியார் எதிர்மறையாகப் பேசி உங்களை காயப்படுத்த முயற்சி செய்தால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மாமியாரின் சொல்லுக்கு எதிர்வினையாற்றுவதற்கு பதிலாக, இதில் உண்மை இருக்கிறதா? எதற்காக சொல்கிறார்கள்? என்று யோசியுங்கள். நீங்கள் தவறு செய்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்..இல்லையென்றால் அமைதியாக இருங்கள். இது மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தருகின்றது என்கின்றனர்.

வாக்குவாதாம் வேண்டாம்: எந்தவொரு விஷயத்திலும் வாக்குவாதம் செய்வது தீர்வாக இருக்காது என்கின்றனர் நிபுணர்கள். காரணம், அவர்கள் சிறு வயதில் இருந்து பார்த்து வளர்ந்த விதத்தை தான் கடைப்பிடிப்பார்கள். புதிதாக வீட்டிற்கு சென்ற ஒருவர் மாற்றங்களை கொண்டு வரும் போது சில கருத்து வேறு பாடுகள் நிலவலாம்.

எனவே, சிறு சிறு பிரச்சனைகளுக்கு வாக்குவாதம் செய்யும் போது மேலும் உறவு சீர்குலையும் நிலை ஏற்படுகிறது. இது இறுதியாக கணவன் மனைவி உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படியான சூழ்நிலையில், அமைதியாக இருந்து சிறிது நேரம் கழித்து பேசுவது சிறந்தது.

மாற்றம் ஒன்றே மாறாதது: உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது உங்களைப் பற்றி ஏதேனும் எதிர்மறையான கருத்துக்களை உங்கள் மாமியார் பேசும்போது நீங்கள் எரிச்சலடையலாம். இப்படியான சூழ்நிலையில், மனதளவில் சோர்வடையாமல் எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் வலுவான ஆளுமை எதிர்காலத்தில் சூழ்நிலைகளை மாற்றலாம்.

அதிகம் யோசிக்காதீர்கள்: ஏதோ ஓர் சூழ்நிலையில் உங்கள் மாமியார் கோபப்பட்டால், அவர்களது கோபம் அர்த்தமுள்ளதா என்பதை சிந்தியுங்கள். உங்கள் மேல் தவறு என்றால் திருத்திக்கொள்ளுங்கள். எப்போது காரணமே இல்லாமல் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் அவர்கள் நெகட்டிவ் மைண்ட் செட்டில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் மாறுவதற்கான வாய்ப்பை கொடுங்கள். என்ன செய்தாலும் மாறவில்லை என்றால் உங்கள் வேலையை தொடருங்கள்.பிரச்சனைகளை பற்றி யோசிப்பது பயனலிக்காது என்கின்றனர்.

இதையும் படிங்க:

ஆண்களை விட பெண்கள் தான் அதில் ஆர்வம் உள்ளவர்கள்.. ஆய்வு கூறுவது என்ன?

சண்டை போட்டாலும் காதல் குறையாமல் இருக்க வேண்டுமா? உங்களுக்காகத்தான் இந்த தகவல்.!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.