ETV Bharat / health

வெந்நீர் Vs குளிர்ந்த நீர்.. எதில் குளித்தால் உடலுக்கு நன்மை அதிகம்? - Which Water Bath Is Better

author img

By ETV Bharat Health Team

Published : Aug 19, 2024, 8:01 PM IST

Which Water Bath Is Better: குளிப்பதால் உடல் சுகாதாரமாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், நாம் குளிக்கும் நீரின் வெப்பநிலையை சரி செய்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும் என்கிறது ஓர் ஆய்வு.

FILE IMAGE
FILE IMAGE (Credit -GETTY IMAGES)

சென்னை: வாரத்திற்கு மூன்று முறை சுடு தண்ணீரிலும், நான்கு முறை குளிர் நீரிலும் குளிப்பதால் உடல் பல பலன்களைப் பெறுவதாக மார்னிங் சைன் அவுட் என்ற தனியார் வலைத்தளப் பக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. கோடை காலம் முடிந்து மழைக்காலம், குளிர்காலம் வந்தாலும், சிலருக்கு குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது தான் திருப்தியாக இருக்கும்.

அதேபோல, சிலர் எந்த சீசனாக இருந்தாலும் சரி சுடுநீரில் குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி இருக்க, குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது நல்லதா? அல்லது சுடு தண்ணீரில் குளிப்பது நல்லதா? என்ற குழப்பமும் பலர் மத்தியில் சுற்றித் திரியும்.

சுடு தண்ணீரில் குளிப்பதன் நன்மைகள்: தசை விறைப்பு அல்லது பதற்றமான மனநிலை இருக்கும் சூழ்நிலையில், வெந்நீரில் குளிப்பது மிகவும் நல்லது. ஏனெனில், இது உடலில் உள்ள இறுக்கமான தசைகளைத் தளர்த்தி அமைதியாக்கும். நோய்வாய்ப்பட்டிருக்கும் போது வெந்நீரில் குளிப்பது மருத்துவ முறையாக மாறுகிறது.

குறிப்பாக, வெந்நீர் உண்மையில் தோல் துளைகளைத் திறந்து அழுக்கு மற்றும் எண்ணெய்யை அகற்றுவதை எளிதாக்குகிறது. வெந்நீரில் இருந்து வரும் வெப்பத்தால் ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோனை மூளை வெளியேற்றுகிறது. இதனால் மன அழுத்தம் நீங்குவதோடு. சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடைகிறது.

தீமைகள்: சூடுநீரில் குளிப்பது அதிக தீமைகள் உள்ளன. தோலின் மேலடுக்கில் ஈரப்பதம் மற்றும் கெரட்டின் செல்களைத் தக்கவைக்க உதவும் சரும அடுக்கை முற்றிலுமாக சேதப்படுத்துகிறது. குறிப்பாக, முடி மற்றும் தோல் சருமத்தை வறட்சியாக மாற்றுகிறது.

குளிர்ந்த நீரில் குளிப்பதன் நன்மைகள்: தீவிர உடற்பயிற்சிக்குப் பின் உடலில் ஏற்படும் தசை மாற்றத்தை குளிர்ந்த நீர் சீர் செய்கிறது. குளிர்ந்த நீர் உடம்பில் படுவதால் உறுப்புகளுக்குத் தேவையான ரத்தம் சென்றடைந்து. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும், மனச்சோர்வை சரி செய்து புத்துணர்ச்சி அளிக்கிறது. சுடுநீரைப் போன்று இல்லாமல் இது உடல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. குளிர்ந்த நீரினால் ஏற்படும் தீமைகள் என்றால், உடல் போதுமான அளவு சூடாக இல்லாவிட்டால் குளிர்ந்த நீர் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லதல்ல என்கிறது ஆய்வு.

கான்ட்ராஸ்ட் ஷவர்: கான்ட்ராஸ்ட் ஷவர் எனப்படுவது பல நன்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது. இது குளிர் மற்றும் சூடான நீரில் குளிக்கும் நன்மைகளை இரட்டிப்பாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை சுடு தண்ணீரிலும், நான்கு முறை குளிர் நீரிலும் குளிப்பதால் உடலுக்கு தேவையான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்)

இதையும் படிங்க: வாயுத்தொல்லையா? அப்போ மறந்து கூட இதை சாப்பிடாதீங்க! - FOOD CAUSES GAS TROUBLE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.