ETV Bharat / health

நீரிழிவு நோயாளிகள் அத்திப்பழத்தை 'இப்படி' சாப்பிடுங்கள்..! - How to eat figs for better benefits - HOW TO EAT FIGS FOR BETTER BENEFITS

ATHIPALAM BENEFITS IN TAMIL: அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டால் பல பயன்கள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதனுடைய முழு பயனையும் பெறுவதற்கு அத்திப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்வோம் இந்த செய்தி தொகுப்பில்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 13, 2024, 4:48 PM IST

ஹைதராபாத்: நீரிழிவு நோயாளிகள் அத்திப்பழம் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்திப்பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதாகவும், அதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2019ம் ஆண்டு நியூட்ரிஷன் ரிசர்ச் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தினமும் இரண்டு அத்திப்பழங்களை சாப்பிடுவதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, அத்திப்பழத்தை உட்கொள்வதால் இதயக் கோளாறுகள், புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

தினசரி எத்தனை அத்திப்பழம் எடுத்துக்கொள்ளலாம்? ஊறவைத்து சாப்பிட்டால் நன்மையா? முழு பயன்களையும் பெற எப்படி சாப்பிட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்..

மலச்சிக்கல்: மலச்சிக்கல் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு அத்திப்பழம் சிறந்த தீர்வாக இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் இரண்டு ஊறவைத்த அத்திப்பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவை குடல் இயக்கங்களைச் சரிசெய்து மலச்சிக்கலைப் போக்குகிறது.

உடல் எடையை குறைக்க உதவும்: உடல் எடையை குறைக்க பலர் பல முயற்சிகளை செய்தாலும் தோல்வியிலேயே முடிகிறது. அந்த வகையில், அத்திப்பழத்தில் காணப்படும் ஏராளமான நார்ச்சத்து உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த உணவு என்கின்றனர். காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அளவுக்கு மீறி எடுத்தால், உடல் எடை அதிகரிக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது: அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்திப்பழம் சாப்பிடுவது உடலில் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. இவை,கரோனரி தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், அதன் விளைவாக இதயத்தின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது.

ஹார்மோன் சமநிலையின்மை: அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது என்று பரிந்துரைக்கிறார்கள்.

எப்படி எடுத்துக்கொள்வது?: இரவில் தூங்கும் முன் இரண்டு அத்திப்பழங்களை தண்ணீரில் ஊறவைக்கவும். முடிந்தால் பாதாம், வால்நட் சேர்த்து ஊற வைக்கவும். இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், மேற்கூறிய பலன்களை பெறலாம்.

நீரிழிவு முதல் உடல் எடை குறைப்பு வரை மேஜிக் செய்யும் பாப்கார்ன்..நம்பி சாப்பிடலாம்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.