ETV Bharat / health

தூங்க செல்வதற்கு முன் மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் 8 நன்மைகள்? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க! - TURMERIC MILK BENEFITS

தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் ஆழ்ந்த உறக்கம் வருவதோடு, புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்கின்றது சர்வதேச ஆய்வு.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Health Team

Published : Nov 28, 2024, 4:08 PM IST

உலகம் முழுவதும் மருத்துவ குணங்களுக்காக அறியப்படும் மஞ்சளை தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் பாலில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? குணமாகும் நோய்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் ஆன்டி ஆக்ஸிடண்ட் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால், பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ஆகையால், தினசரி இரவு பாலில் மஞ்சள் கலந்து குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • சுவாசக்கோளாறுகள் குணமாகும்: மஞ்சள் பாலிற்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்க்கும் குணங்களும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம். மனிதனின் சுவாசப்பாதையை பாதுகாகக்கூடிய நோய் கிருமிகளை அழிப்பதோடு புண்களை குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது. இதனால், சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் இருக்கும். குறிப்பாக, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் மஞ்சள் பால் குடிப்பது நல்லது.
  • புற்றுநோய் வராமல் தடுக்கும்: மஞ்சள் பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அழற்சி பண்புகள் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளை அழிக்கும். இதனால், மார்பகம், சருமம், புரோஸ்டேட், பெருங்குடல் என உடலில் எந்த பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் என்கிறது மெடிக்கல் நியூஸ் டுடே.
  • தூக்கமின்மையை தடுக்கும்: இரவு தூங்க செல்வதற்கு முன் வெதுவெதுப்பான பாலில், மஞ்சள் கலந்து குடிப்பதால், அதில் இருக்கக்கூடிய அமினோ அமிலங்கள், டிரிப்டோபான் போன்ற வேதிப்பொருட்கள் தூக்கத்தை உண்டாக்ககூடிய ஹார்மோனை உடலில் உற்பத்தி செய்து நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்.
  • கீல்வாத வலி குணமாகும்: இந்த பாலில் இருக்கக்கூடிய ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள், மூட்டுகளில் உண்டாகக்கூடிய இன்பிளமேஷனை தடுத்து மூட்டு வீக்கம் மற்றும் வலியை குணமாக்குகிறது.
  • இரத்தத்தை சுத்தப்படுத்தும்: ஆயுர்வேத மருத்துவ முறைகளில், இரத்தத்தை சுத்தப்படுத்தும் மருந்தாக மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத நச்சு கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  • எலும்பு ஆரோக்கியம்: பாலில் இருக்கக்கூடிய கால்சியம், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், மஞ்சள் எலும்பு தேய்மானத்தை தடுப்பதால், மஞ்சள் கலந்த பால் குடித்து வருவது எலும்பிற்கு பல நன்மைகளை தருகின்றது.
  • செரிமான பிரச்சனை நீங்கும்: செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணம், வயிற்றுப்போக்கு, வயிற்று புண், மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் மஞ்சள் கலந்த பால் குடித்து வருவதால் குடல் மற்றும் இரைப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மஞ்சள் பால் செய்முறை: ஒரு கிளாஸ் பாலில் கால் டீஸ்பூன் மஞ்சள் கலந்து பாலை நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர், பாலை வடிகட்டி, தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து குடித்தால், மேலே உள்ள பலன்களைப் பெறலாம். விருப்பப்பட்டவர்கள், இதனுடன் மிளகு தூள் சேர்த்து குடிக்கலாம்.

இதையும் படிங்க:

எலும்பு தேய்மானம்? தினமும் டீ, காபிக்கு பதிலா ஒரு ஸ்பூன் 'இதை' பாலில் கலந்து குடிங்க!

கல்லீரலை சுத்தப்படுத்தும் நெல்லிக்காய்..3 நாட்களுக்கு இப்படி பயன்படுத்துங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.