ETV Bharat / health

சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? - Benefits of Nungu - BENEFITS OF NUNGU

Ice apple benefits: வெயில் காலத்தில் விற்கப்படும் நுங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது என்ற கருத்து உண்மைதானா? அப்படி சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)
author img

By ETV Bharat Health Team

Published : Aug 30, 2024, 11:20 AM IST

ஹைதராபாத்: கோடை காலத்தில் கூவி கூவி விற்கப்படும் நுங்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்தை அதிகரிப்பது என மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாக இருக்கிறது. இது, ஐஸ் ஆப்பிள் (Ice Apple) என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய நுங்கில் இருக்கும் பயன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

நுங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

  1. கால்சியம்
  2. புரதம்
  3. நார்ச்சத்து
  4. வைட்டமின்கள் சி,ஏ,ஈ,கே
  5. இரும்புச்சத்து
  6. பொட்டாசியம்
  7. துத்தநாதம் (Zinc)
  8. பாஸ்பரஸ்

ஹைதராபாத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். நஹுஷ் குண்டேவின் கூற்றுப்படி, தேங்காய் சுவையில் உள்ள நுங்கை உட்கொள்வதன் மூலம் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் பி, இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் கிடைப்பதாக கூறுகிறார்.

நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது:

  • நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது: நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக, மக்கள் எளிதில் தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • நுங்கு உங்கள் உடலை குளிர்ச்சியாகவும்,நீர்ச்சத்தை அதிகரிக்கவும் உதவியாக இருக்கிறது
  • எடை மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது
  • செரிமான பிரச்சனைகளை குணமாகும்
  • கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய பங்களிக்கிறது
  • இந்த பழத்தை உட்கொள்வதன் மூலம் அரிப்பு மற்றும் சொறி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகிறது
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது
  • இரத்த சோகை உள்ளபவர்களுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது
  • சருமம் மற்றும் முடி பிரச்சனைகளை சரி செய்கிறது
  • இரத்த சக்கரையின் அளவை குறைப்பதால், சக்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு முதல் 3 நுங்குகள் வரை எடுத்துக்கொள்ளலாம்.

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து: நுங்கில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கான சிறந்த பழமாக உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து சர்க்கரை அளவை குறைக்கிறது.

நுங்கை இயற்கையான வடிவத்தில் உட்கொள்வதே சிறந்த வழி. இருப்பினும், ஐஸ் ஆப்பிள் ஷேக், கஸ்டர்ட் போன்றும் எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் தானியங்களுடன் இணைத்து காலை உணவாக சாப்பிடுவது நன்மை அளிக்கிறது. இதில் உள்ள நீர்ச்சத்து நீண்ட நேரத்திற்கு வயிற்றை முழுமையாக உணர வைத்து தின்பண்டங்கள் உட்கொள்வதை தவிர்க்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்)

இதையும் படிங்க:

Bore அடிச்சா சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.