ETV Bharat / health

கெட்ட கொழுப்பை குறைக்கும் 5 சூப்பர் ஃபுட்ஸ்..தொப்பையும் கடகடவென குறையும்! - FOODS TO LOWER CHOLESTEROL

உடலில் தேங்கியுள்ள அல்லது தேங்கும் கெட்ட கொலஸ்டிராலை குறைக்க உதவும் இந்த 5 உணவுகளை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)
author img

By ETV Bharat Health Team

Published : Dec 15, 2024, 1:59 PM IST

உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிரால் என்று சொல்லப்படுகிற எல்டிஎல் ( LDL Cholesterol) மிக ஆபத்தான இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த கெட்ட கொலஸ்டிராலை உடலில் இருந்து வெளியேற்றுவது மிகவும் அவசியம். காரணம், உடலில் கெட்ட கொலஸ்டிராலின் அளவு அதிகரித்தால், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் வரிசையாக வரத் தொடங்கும். இந்நிலையில், மிகவும் மோசமான கெட்ட கொலஸ்டிராலை குறைக்க உதவும் உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஓட்ஸ்: அதிக அளவில் நார்ச்சத்து உள்ள உணவாக ஓட்ஸ் இருப்பதால், காலை உணவுக்கு ஓட்ஸ் மிகவும் அரோக்கியமான தேர்வாக இருக்கிறது. காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக்கொள்ளும் போது, இது நீண்ட நேரத்திற்கு நிறைவான உணர்வை கொடுத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது. அதுமட்டுமல்லாமல், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

நட்ஸ்: பாதாம், வால்நட், சியா, ஆளி விதைகள் போன்ற உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவியாக இருக்கிறது. இவற்றில் நல்ல கொழுப்புகள் அதிக அளவில் உள்ளதால், தினசரி காலை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது தேவையற்ற பசியை தடுத்து தொப்பையை குறைக்க உதவும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

வெண்டைக்காய்: காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து கொலஸ்டிராலை கட்டுக்குள் வைக்கின்றன. அதிலும், குறிப்பாக, நார்ச்சத்து அதிகமுள்ள வெண்டைக்காய் ரத்தக்குழாயில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடுகின்றன. வெண்டைக்காயில் உள்ள பிசுபிசு தன்மை உயர் கொலஸ்டிராலை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் சீராக வைக்க உதவுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

மீன்: கொழுப்பு நிறைந்த மீன்களை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, இரத்ததில் உள்ள டிரை கிளிசரைடுகள் குறையும். அதே போல், கெட்ட கொழுப்புகளையும் LDL Cholesterol கட்டுப்படுத்துகிறது. அசைவ பிரியர்கள், சிவப்பிறைச்சியை சாப்பிடுவதை குறைத்தால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேராது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

வெந்தயம்: இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க வெந்தயம் உதவியாக இருக்கிறது. பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம் இரும்புச்சத்துகளால் நிறைந்துள்ள வெந்தயம், கல்லீரலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால், இதய நலம் முதல் உடல் எடை வரை ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கிறது. ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் மென்று அதன் தண்ணீரையும் குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிங்க:

உடலில் யூரிக் அமிலம் உற்பத்தியை குறைக்கணுமா? இந்த 5 சூப்பர் ஃபுட்ஸ் கட்டாயம் உதவும்!

காலையில் எழுந்ததும் அசிடிட்டி பிரச்சனையா? இந்த 8 பானங்களை ட்ரை பண்ணி பாருங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.