ஹைதராபாத்: தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு முதல் முறையாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளது கித்வாய் இன்ஸ்டிடியூட் ஆப் ஆன்காலஜி மருத்துவமனை.
தலசீமியா: தலசீமியா என்பது ஒருவகை சிவப்பணுக்கள் குறைபாடாகும். இது மரபணு கோளாறு மற்றும் பரம்பரை பாதிப்பு ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 7 சிறுவனுக்கு முதல்முறையாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளது கர்நாடகா மாநிலத்தில் உள்ள கித்வாய் இன்ஸ்டிடியூட் ஆப் ஆன்காலஜி மருத்துவமனை.
மருத்துவர்களுக்கு அமைச்சர் பாராட்டு: இந்த நிலையில், மருத்துவர்களின் பணி பாராட்டுக்குரியது என கர்நாடக மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் மருத்துவர் ஷரன் பிரகாஷ் பாட்டீல் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்ற அமைச்சர் ஷரன் பிரகாஷ் பாட்டீல் கூறுகையில், “பாதிக்கப்பட்டவர்களுக்கு லும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சேவைகளை எளிதில் கிடைக்குமாறு செய்வதே இன்றைய தேவையாகும். எதிர்காலத்தில் இம்மாதிரியான திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு சிந்தித்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை சிகிச்சைக்கு 7 முதல் 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கித்வாய் இன்ஸ்டிடியூட்டில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
15 ஆயிரம் குழந்தைகளுக்கு தலசீமியா: கித்வாய் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குநர் மருத்துவர் நவீன் பட் கூறுகையில், “தலசீமியா என்பது பரம்பரை இரத்த நோய்களில் ஒன்றாகும். இந்த ரத்த சோகை நோய்க்கு மாதாந்திர ரத்த மாற்றம் மற்றும் இரும்பு சத்து தேவைப்படுகின்றது. நேஷனல் ஹெல்த் மிஷன் (National Health Mission) புள்ளி விவரங்களின் படி, தலசீமியா நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow Transplant – BMT) முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் குழந்தைகள் தலசீமியா நோயுடன் பிறக்கின்றனர்.
இதையும் படிங்க: இறந்தும் இளம் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர்..சென்னையில் நெகிழ்ச்சி! - LUNG TRANSPLANT
உலகளாவில் பார்க்கையில் 25 சதவீதம் தலசீமியா பாதிப்பு இந்தியாவில் நடைபெறுகிறது. கித்வாய் இன்ஸ்டிடியூட்டில் முதல்முறையாக ஏழு வயது சிறுவனுக்கு முதல்முறையாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (BMT) செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையானது பிரதமர் நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதி (Chief Minister's Relief Fund - CMARAF), எஸ்சிபி மற்றும் டிஎஸ்பி திட்டம், இஎஸ்ஐ மற்றும் சிஜிஹெச்எஸ் திட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. கித்வாய் இன்ஸ்டிடியூட் மருத்துவர்களின் கடின உழைப்பு அளப்பரியது” என்றார்.
100வது சிகிச்சை: கித்வாய் இன்ஸ்டிடியூட்டில் ஏப்ரல் 2022இல் முதல் பெரியவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. அப்போதில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கு எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. 14 படுக்கை வசதி மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைகள் பிரிவை கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள 114 எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை மையங்களில் சுமார் 3 ஆயிரம் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்