ETV Bharat / health

நடக்காமல் இருக்கும் குழந்தைகள்... புற்றுமண் சிகிச்சை தரும் தீர்வு.! - What to do to make baby walk - WHAT TO DO TO MAKE BABY WALK

சில குழந்தைகள் 2 வயதாகியும் நடக்காமல் இருப்பார்கள். அவர்களுக்கு நம் முன்னோர்கள் பின்பற்றிய புற்றுமண் சிகிச்சை மேற்கொள்வது எப்படி எனப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 4:20 PM IST

சென்னை: பிறந்து 8-ஆம் மாதத்தில் குழந்தைகள் எட்டி வைக்க வேண்டும் எனச் சொல்வார்கள். ஆனால் இன்றைய சூழலில் குழந்தைகள் ஒரு வயதைக் கடந்தும் பலர் நடக்க ஆரம்பிப்பது இல்லை. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பெற்றோர் மற்றும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், குழந்தைகளைத் தரையில் இறக்கி விடாமல் தூக்கியே வைத்திருப்பது.

மற்றொன்று சில ஆரோக்கிய குறைபாடுகள் காரணமாக நடப்பதில் தாமதம் ஏற்படுதல். இதுபோன்ற சூழலில் குழந்தைகளுக்கு நடக்கப் பயிற்சி கொடுக்க வேண்டியது மிக அவசியம். அதேபோல நம் முன்னோர்கள் பின்பற்றிய பாட்டி வைத்தியம் என்று அழைக்கப்படும் அன்றைய வீட்டு வைத்தியம் குறித்துப் பார்க்கலாம். புற்றுமண் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காடுகள் மற்றும் விவசாய நிலங்களின் ஒரு சில பகுதிகளில் கரையான் புற்று இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். கரையான் தனக்கான ஒரு வீட்டை அதாவது புற்றைக் கட்ட அதீத திட்டம் தீட்டம்.

இதையும் படிங்க: உங்கள் குழந்தைக்கான பள்ளியை எப்படித் தேர்வு செய்வீர்கள்? தெரிந்து கொள்ளுங்கள்! - Healthy Schooling Strong Foundation

இன்றைய கட்டிடக்கலை வல்லுநர்களுக்கு எல்லாம் முன்னோடியான கரையான்கள் குறிப்பிட்ட நிலத்தைத் தேர்வு செய்து, அதில் தனது உடலில் இருந்து வெளியேறும் சில திரவத்தை வைத்து புற்றை உருவாக்கும். அந்த புற்றுமண் மிகவும் அசாத்தியமான மருத்துவ பலன் கொண்டது என இயற்கை மருத்துவமும் கூறுகிறது. இந்த புற்று மண்ணை கொஞ்சம் எடுத்து தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்துவர முகம் பளபளக்கும் எனக்கூறப்படுகிறது.

அதையெல்லாம் கடந்து சிறு குழந்தைகள் நடக்கத் தாமதம் ஆனால் அதற்கு இந்த புற்றுமண் சிறந்த தீர்வாக அமையும் எனக்கூறப்படுகிறது. அதாவது அந்த கரையான் புற்று மண்ணை எடுத்து வந்து வெயிலில் போட்டு நன்றாகக் காய வைக்க வேண்டும்.

அதன் பிறகு, அதில் இருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து தண்ணீர் ஊற்றிப் பிசைந்து கால் முழுவதும் மூடும் வகையில் சேற்றை அப்ப வேண்டும். அந்த மண் நன்றாகக் காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கழுவி எடுங்கள். தொடர்ந்து இதைச் செய்துவரக் குழந்தைகள் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிப்பார்கள்.

(பின் குறிப்பு: இந்தச் செய்தி ஆரோக்கியம் ரீதியாக உங்களுக்குத் தகவல்களை வழங்க மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை நீங்கள் பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். ஈடிவி பாரத் இதை உறுதி செய்யவில்லை)

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைகளுக்குச் சூடு பிடித்து அழுதால் என்ன செய்வது? நாட்டுப்புற மருத்துவம் கூறும் அருமருந்து.! - What To Do Relieve Body Heat Baby

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.