ஹைதராபாத்: சாதாரண நாள் முதல் பண்டிகை நாட்களில் பிரசாதமாக பரிமாறப்படும் கொண்டைக்கடலை அனைவரது வீட்டிலும் எளிதாக கிடைக்க கூடியது தான். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நிறைத்து வைத்துள்ள கொண்டைக்கடலையை தினமும் ஒரு கப் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொண்டைக்கடலையை வேக வைத்து காலை அல்லது மாலை நேரங்களில் ஸ்நேகஸ்காவும், குழப்பு, சாலட் என சாதம் அல்லது சப்பாத்தியுடன் எடுத்துக்கொள்ளலாம். கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கொண்டைக்கடலை நன்மைகள்:
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது: கொண்டைக்கடலை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சத்தான உணவாக கருத்தப்படுகிறது. மேலும், இதனை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைகிறது.
புரதம் நிறைந்தது: கொண்டைக்கடலை ஒரு சிறந்த தாவர அடிப்படையிலான புரதம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை ஒரு கப் கொண்டைக்கடலையை எடுத்துக்கொள்ளலாம்.இறைச்சிக்கு அருமையான மாற்றகாக கொண்டைக்கடலை இருப்பதால், சைவ உணவைப் பின்பற்றுபவர்களுக்கு இந்த உணவு ஒரு சிறந்த தேர்வாகும்.
இதய ஆரோக்கியம்: கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
எலும்பு ஆரோக்கியம்: கொண்டைக்கடலையில் கால்சியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளன, அவை எலும்பு அமைப்பு மற்றும் வலிமையைப் பராமரிக்க அவசியாமான ஒன்றாக இருக்கிறது.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்: கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. மேலும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவு: உணவில் கொண்டைக்கடலையை சேர்த்துக்கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கிறது. இதன் விளைவாக, உடல் ஆரோக்கியமாக உள்ளது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது: காலையில் கொண்டைக்கடலையை எடுத்துக்கொள்வதன் மூலம் வயிறு நிரம்பி தேவையற்ற உணவுகள் உட்கொள்வதில் இருந்து தடுக்கிறது. நொறுக்குத் தீனி மீதான பசி குறைவதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
இதையும் படிங்க: |