சென்னை: மொபைல் ஃபோன் இல்லாத உலகத்தை யாராலும் இனி கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் அந்த மொபைல் ஃபோன்களை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் அறிவுறுத்தல். பல இடங்களில், மொபைல் ஃபோன்கள் வெடிக்கும் செய்தியைக் கேட்டிருப்போம்.
இன்று பலருக்கு சம்பந்தமே இல்லாமல் திடீர் தலைவலி, காதுவலி, கண் தொடர்பான பிரச்சனைகள், நரம்பு தொடர்பான பிரச்சனைகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்கு இந்த மொபைல் ஃபோன்களும் ஒரு வகையில் காரணமாக அமைகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சு மனிதர்களின் தலைநரம்புகளை சென்று பாதிப்படையச் செய்வதாகக் கூறப்படுகிறது. மொபைல் ஃபோன் மட்டும் இன்றி, இந்த நவீன நாகரீகத்தில் தயாரிக்கப்படும் ப்ளூ டூத் ஹெட், கணினி உள்ளிட்ட பலவற்றில் இந்த கதிர் வீச்சு இருக்கிறது. ஆனால் இந்த கதிர்வீச்சின் அளவை ஒவ்வொரு நாடுகளும் அனுமதித்துள்ள SAR மதிப்புக்குக் கீழ் பயன்படுத்தினால் ஓரளவு பாதுகாப்பானது எனக் கூறப்படுகிறது.
சரி இந்த SAR மதிப்பு என்றால் என்ன? குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதம் அதாவது Specific Absorption Rate என்பது மனித தலை மற்றும் உடலில் ரேடியோ அலைவரிசை (Radio Frequency) டெபாசிட் செய்யும் சக்தியின் அளவீடாகும். மொபைல் போன், ப்ளூ டூத் உள்ளிட்ட வயர்லெஸ் உபகரணங்கள் அனைத்தும் SAR சோதனைக்கு உட்படுத்தப்பட்டே சந்தை படுத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவின் மத்திய தொலை தொடர்புத்துறை அனுமதித்துள்ள SAR மதிப்பு 1.6 W/kg ஆகும். இது ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே மாறுபடும். 1.6 W/kg-ம் மேல் SAR மதிப்பு அதிகரிக்கும்போது அந்த மொபைல் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சரி SAR மதிப்பு 1.6 W/kg-ம் குறைவாகத்தான் உள்ளதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? உங்கள் மொபைல் ஃபோனை எடுத்து அதில், *#07# என டைப் செய்யுங்கள். உடனே உங்கள் மொபைல் ஃபோனிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அதில், உங்கள் மொபைல் ஃபோனின் SAR மதிப்பு Maximum SAR Level நீங்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்தியதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு Head SAR மற்றும் Body SAR மதிப்பீட்டு, 1.6 W/kg எனக் காண்பிக்கும் இதில் இருந்து கூடுதலாக இருந்தால் அந்த மொபைலை பயன்படுத்தக் கூடாது.
கதிர் வீச்சு உபகரணங்களை எப்படிப் பயன்படுத்தக்கூடாது? மேலும், இரவில் உறங்கும்போது தலையணைக்குக் கீழே மொபைல் ஃபோனை வைத்துக்கொண்டு உறங்குவது, ஃப்ளூ டூத் ஹெட் செட்டை தொடர்ந்து பயன்படுத்துவது, சட்டை பை மற்றும் ஃபேன்ட் பாக்கெட்டில் மொபைல் ஃபோனை நீண்ட நேரம் வைத்திருப்பது.
மடிக் கணினியைத் தொடர்ந்து மடியில் வைத்துக்கொண்டு பயன்படுத்துவது உள்ளிட்ட பல செயல்கள் கதிர் வீச்சின் இயக்கத்தை நமது உடலுக்குள் செலுத்தும். இதனால் உடல் நலன் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்போதே உங்கள் மொபைல் ஃபோனின் SAR மதிப்பைத் தெரிந்துகொள்ளுங்கள், பாதுகாப்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழுங்கள்.
இதையும் படிங்க: முடி நீளமாக வளர இதுதான் பெஸ்ட்.. ட்ரை பண்ணி பாருங்க.! - Homemade Hair Tonic For Hair Growth