ஹைதராபாத்: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாக மாறிவிட்டது நீரிழிவு நோய். இவர்கள், தங்கள் வாழ்க்கை முழுவதும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து, சிறுநீரகம், இதய நோய்கள் என பல வகையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் அறிக்கையின்படி, நீரிழிவு நோயாளிகள் தினமும் சில வகையான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிறது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க என்னென்ன பயிற்சிகள் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்..
நீச்சல்: நீச்சல் ஒரு நல்ல கார்டியோ உடற்பயிற்சி. இது கலோரிகளை எரிக்கவும் எடை குறைக்கவும் உதவுகிறது. நீச்சல் செய்யும் போது, நமது தசைகள் கடினமாக வேலை செய்வதால் உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்துகிறது. இதனால், சர்க்கரை உள்ளவர்கள் நீச்சல் செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
சைக்கிளிங்: சைக்கிளிங் செய்யும் பொழுது நமது தசைகள் அதிக வேலைகளைச் செய்கின்றன. இந்த தசைகளை இயக்குவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றலைப் பெற நமது உடல் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைத்து சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
2018ம் ஆண்டில் 'ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசம்' இல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சைக்கிளிங் செய்வதால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
நடைப்பயிற்சி: சமச்சீரான உணவை உட்கொண்டு தினமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும். காலையிலும் மாலையிலும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
ஜாகிங்: நீரிழிவு நோயாளிகள் ஜாகிங் செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கின்றனர். ஆனால், இதற்கு முன்னதாக, நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அவர்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களின்படி மட்டுமே ஜாகிங் செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்
யோகா: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யோகா செய்வதன் மூலம் குளுக்கோஸ் அளவை சமமாகவும், மன அழுத்தத்தை குறைக்க முடியும். நீரிழிவு நோயாளிகள் யோகா செய்வதன் மூலம் இன்சுலின் உணர்திறன் அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
- பாலாசனம்
- அதோமுகி ஸ்வனாசனம்
- அதோ முகி மர்ஜாரி ஆசனம்
- மர்ஜாரியாசனம்
- பஷ்சிகுோட்டனாசன போன்ற ஆசனங்களை செய்வதன் மூலம் கணயத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது
இதையும் படிங்க:
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்