குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும் சீசன் பழமான சீத்தாப்பழம் சாலையோர கடைகள் தொடங்கி சூப்பர் மார்கெட் வரையிலும் தற்போது விற்பனை களைக்கட்டியுள்ளது. வைட்டமின், புரதம், தாதுப்பொருட்கள், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களை கொண்ட சீத்தாப்பழம் அரோக்கிய நன்மைகளை தாண்டி சுவையானதும் தான். குறிப்பாக, பழத்தில் இருக்கும் வைட்டமின் சி அருமருந்தாக செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆன்டி ஆக்ஸிடண்ட்களை அதிகம் கொண்டுள்ள இப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க..
- உடல் எடை குறையும்: முதன்மையாக, சீத்தாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கிறது. அதிலும், தைராய்டு பிரச்சனையினால் அதிகரித்த உடல் எடையை குறைப்பதில் சீத்தாப்பழம் சிறப்பாக செயல்படுகிறது.
- கர்ப்பிணிகளுக்கு சிறந்தது: கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று சீத்தாப்பழம். குளிர்ச்சியை தரக்கூடிய பழம் என்பதால், கருச்சிதைவு போன்றவை தடுக்கப்படும். கூடுதலாக, சிசுவின் மூளை, நரம்பு மண்டலம், எலும்பு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.
- ஆஸ்துமா குணமாகும்: சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது. வீசிங் பிரச்சனை உள்ளவர்கள் சீத்தாபழம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
- மாரடைப்பு வராமல் தடுக்கும்: சீத்தாப்பழத்தில் உள்ள அதிகப்படியான மெக்னீசியம் இதயச் சுவர்களை வலுப்படுத்தும். அதோடு, இருதயம் சீராக சுருங்கி விரிவதற்கு உதவியாக இருப்பதால், மாரடைப்பு தடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இடுப்பு கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை..வெறும் வயிற்றில் தினமும் இப்படி சாப்பிடுங்க!
- செரிமானம் சீராகும்: செரிமான பிரச்சனைகளான அஜீரணம், குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு அளிக்கிறது. குறிப்பாக, உணவு எடுத்துக்கொண்டதும் வயிற்று வலியினால் அவதிப்படுபவர்கள் சீத்தாப்பழம் எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள், குடலின் இயக்கத்தை சீராக இயக்கி செரிமானம் நன்கு நடைபெறுவதை உறுதி செய்கிறது.
- சர்க்கரை நோய் தடுக்கப்படும்: பழத்தில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை குறைப்பதால் டைப் 2 நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த பழம்.
- அனிமியா குணமாகும்: சீத்தாப்பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த அளவை அதிகரிக்கும். இதனால், இரத்தசோசை பிரச்சனை ஏற்படாது.
இதையும் படிங்க: தினசரி 2 பல் பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! தினசரி 1 ஷாட் பீட்ரூட் ஜூஸ் போதும்..இந்த பிரச்சனைகள் எல்லாம் ஓடிவிடும்! |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்