இந்திய உணவில், குறிப்பாக தமிழர்களின் உணவுகளில், அதன் நறுமணத்திற்காகவும், சத்துக்காகவும் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த கறிவேப்பிலைகள். இப்படி உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலைகளை, நாம் தினசரி வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வரும் போது உடல் எடையை குறைப்பது முதல் முடி வளர்ச்சி வரை பல நன்மைகளை கொடுக்கின்றது. இப்படி, அனைத்து நன்மைகளையும் பெற கறிவேப்பிலையை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்..
- தினசரி காலை வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலைகளை மென்று வரும் போது, வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் குறைந்து உடல் எடை குறையும்.
- இரத்த சோகை உள்ளவர்கள், கறிவேப்பிலையுடன் 2 பேரிச்சம்பழத்தை தினசரி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் போது, உடலில் இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.
- சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினசரி காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வரும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து சீராக இருக்கும்.
- கறிவேப்பிலை, உடம்பில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை குறைப்பது போல, நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் பிரச்சனைகளை வரவிடாமல் செய்கிறது.
- நீண்ட நாட்களாக செரிமான பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள், அதிகாலை வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலைகளை மென்று வந்தால் செரிமான பிரச்சனைகள் காணாமல் போய்விடும்.
- 10 கறிவேப்பிலை இலைகளை தினசரி சாப்பிட்டு வரும் போது, முடி வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை காணலாம். முடி கொட்டுவது குறைவதோடு, கருமையாக வளரும்.
- கறிவேப்பிலை பொடியில் சிறிது தேன் கலந்து காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வரும் போது, உடலில் தேங்கியிருக்கும் சளி வெளியேறிவிடும்.
- கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது, கல்லீரலில் தேங்கியிருக்கக் கூடிய நச்சுக்கள் வெளியேறும்.
- கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ , சி கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் உதவியாக இருக்கிறது.
- கறிவேப்பிலையின் சாற்றை வயதானவர்கள் குடித்து வரும் போது, அவர்களுக்கு ஏற்படும் பார்வை கோளாறு மற்றும் முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கம் குறையும்.
- தேனில், கறிவேப்பிலை பொடியை கலந்து தொடர்ந்து 4 முதல் 5 நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வரும் போது, மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவரணம் கிடைக்கும்.
- 10 கறிவேப்பிலை இலைகளின் சாற்றை எடுத்து, அதில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வர, கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் எழுந்தவுடன் ஏற்படும் சோர்வு நீங்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்