ETV Bharat / health

"வர்த்தக காரணங்களுக்காக கோவிஷீல்டு தடுப்பூசி திரும்பப் பெறப்படுகிறது" - அஸ்ட்ராசெனகா அறிவிப்பு! - AstraZeneca Withdraws Covishield

AstraZeneca Withdraws Covishield Vaccine: வர்த்தக காரணங்களுக்காக கோவிஷீல்டு தடுப்பூசி திரும்பப் பெறப்படுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவிட் தடுப்பூசி கோப்பு புகைப்படம்
கோவிட் தடுப்பூசி கோப்பு புகைப்படம் (credit to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 3:08 PM IST

கேம்பிரிட்ஜ்: கோவிஷீல்டு தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. கரோனாவுக்கு ஏற்ப பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அதிகளவில் சந்தைகளில் இருப்பதால் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான தேவை குறைந்துள்ளதால், இனி தடுப்பூசி தயாரிக்கவோ அல்லது விற்கப்படவோ மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியைத் திரும்ப பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் 5 ஆம் தேதி வழங்கப்பட்டு, இன்று நடைமுறைக்கு வந்தது.

முன்னதாக, கோவிஷீல்டு வழக்கு தொடர்பாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் மிக அரிய வகையாக டிடிஎஸ் எனப்படும் ரத்த உறைதல் மற்றும், ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தது.

கரோனா பரவலின் போது அஸ்ட்ராசெனகா நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசியை உருவாக்கியது. தடுப்பூசிக்கான உரிமையைப் பெற்ற இந்தியாவின் சீரம் நிறுவனம் அதை கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டு வந்தது. மேலும், இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு இந்த கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 3வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு வாக்குப்பதிவு? முழு விபரம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.