சென்னை: உணவு உட்கொள்வது அதிலும் ஹோட்டல்களுக்கு சென்று உணவு உட்கொள்வது என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொண்டாட்டம்தான். காரணம், அங்கு கிடைக்கும் வெரைட்டியோ அல்லது சுவையோ வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளில் கிடைக்காது. ஹோட்டலில் உள்ள மெனுவை பார்த்து பார்த்து ஆர்டர் செய்து அழகாக கொண்டு வந்து டைனிங் டெபிள்களில் வைக்கப்படும் உணவுகளை பார்க்கும்போதே எக்ஸ்ட்ராவாக ஒரு வயிற்றை கடன் வாங்கத்தோன்றும்.
ஆனால் நினைவில் கொள்ளுங்கள், உணவகங்களில் சுவைக்காகவும், நிறத்திற்காகவும் பல்வேறு சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. அது மட்டும் இன்றி குளிர்சாதன பெட்டிகளில் நீண்ட நாட்களாக பாதுகாத்து வைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ள நேரிடும். இதனால் ஃபுட் பாயிசன் ஆவது மட்டும் இன்றி, பல்வேறு உடல்நல கோளாறுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். அந்த வகையில் நீங்கள் உணவகங்களுக்கு சென்றால் ஆர்டர் செய்யக்கூடாத சிலவகை உணவுகள் மற்றும் உணவகங்களை தேர்வு செய்யும் முறை குறித்து இங்கே பார்க்கலாம்.
மீன் உணவுகளை தேர்வு செய்யும்போது கவனம் தேவை: மீன் உள்ளிட்ட அனைத்து வகையான அசைவ உணவுகளும், குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்துதான் உணவகங்களில் சமைக்கப்படுகிறது. குறிப்பாக மீன் மார்கெட்டுகள் வார இறுதியில் அதாவது ஞாயிறு கிழமைகளில் மூடப்படுவதால் சனிக்கிழமைக்கும் முந்தைய மீன்கள்தான் உணவகங்களில் இருக்கும். அவற்றை உங்கள் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு உகந்ததாக இருக்காது. வயிறு கோளாறு, வாய்வு பிரச்சனை உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்படலாம்.
பாட்டிலில் நிரப்பப்பட்ட கெட்சப்பால் ஆபத்து: பீட்சா, பர்கர் முதல் ஃப்ரைடு ரைஸ், நூடல்ஸ் என எதை எடுத்துக்கொண்டாலும் அதற்கு சில்லி கெட்சப், டொமேடோ கெட்சப் என ஊற்றி ஒரு பிடி பிடித்துவிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. உணவில் சுவை மட்டும் பார்த்தால், உங்கள் உடலுக்கு நீங்களே தீங்கு விளைவிக்கிறீகள் என்று அர்த்தம். உணவகங்களின் டேபிள்களில் வைக்கப்பட்டிருக்கும் கெட்சப் காலியான உடன் அல்லது பாதியான உடன் அதை மேலும் மேலும் ஃபில் செய்து வைப்பார்கள். அது முழுமையாக காலியான பின்பு அந்த பாட்டிலை சுத்தம் செய்து புதிய கெட்சப்பை ஊற்ற மாட்டார்கள். இதனால் உங்கள் உடல் பல்வேறு உபாதைகளை சந்திக்க நேரிடும். கவனமாக இருங்கள்.
டெபிள்களில் ஜக்கில் வைக்கப்பட்டிருக்கும் குடி நீர்: உணவகங்களில் ஜக்கில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும், மேலும் கொஞ்சம் அழகூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சில உணவகங்களில் கண்ணாடி ஜக்குகளில் எலுமிச்சை புதினா இலைகள் போன்றவை போடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். இவற்றில் இருந்து நீங்கள் தண்ணீரை குடிக்க முயல்வதற்கு முன்பு, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விலைக்கு வாங்கி குடிப்பது சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். காரணம் ஜக்கில் தண்ணீர் நிரப்பப்பட்டது எப்போது? எப்படி? என்ற எதுவும் நமக்கு தெரியாது. ஜக்குகள் சுத்தமாக கழுவப்பட்டதா அல்லது வேறு யாரெனும் பயன்படுத்தி இருந்த மிச்ச தண்ணீரில் மேலும் தண்ணீரை நிரப்பி வைப்பார்கள். இந்த சூழலில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.
உணவகங்களுக்கு சென்று சிக்கன் ஆர்டர் செய்யலாமா? சிக்கன் பிரியர்களுக்கு இது கவலை தரும் விஷயமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நீங்கள் உணவகங்களுக்கு செல்லும்போது சிக்கன் உணவுகளை தவிர்ப்பதுதான் சிறந்தது. காரணம் சிக்கன் உணவுகள் ஒருமுறை சமைக்கப்பட்டு மீண்டும் மீண்டும் சூடாக்கி வாடிக்கையாளரின் தட்டுகளுக்கு வருகிறது. அந்த உணவு எப்போது சமைக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. அது மட்டும் இன்றி ஏற்கனவே வருக்கப்பட்ட எண்ணையில் மீண்டும் பொறிக்கப்படும் சிக்கன் உங்கள் உடலுக்கு நிச்சயமாக தீங்கு விளைவிக்கும். ஷவர்மா போன்ற உணவுகள் போதுமான அளவு வேக வைக்காமலும், நாள் கணக்கில் சூடாக்கப்பட்டும் விநியோகம் செய்யப்பட்டு கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்திகளும் வெளியாகின.
உணவகங்களை தேர்வு செய்யும்போது கவனம் தேவை: இதையெல்லாம் கடந்து நீங்கள் நினைவில் வைக்க வேண்டிய முக்கியமான ஒன்று உணவகங்களை சரியானதாக தேர்வு செய்ய வேண்டும். உள்ளே சென்று விட்டோம் இனி வெளியேறினால் பிறர் அவமானமாக நினைப்பார்கள் என நினைத்து உங்களை நீங்களே காம்பர்மைஸ் செய்துகொள்ள வேண்டாம். உணவகத்தை தேர்வு செய்யும்போது அந்த இடம் சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பதை கவனியுங்கள். அதேபோல் அங்கு வேலை செய்யும் உழியர்கள் தலையுறை, கையுறை உள்ளிட்டவைகள் அணிந்தவாறு சுத்தமாக உள்ளார்களா? என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வேகவைத்த முட்டை ஓட்டை உரிக்க முடியவில்லையா? உப்புக்கு பதில் இத யூஸ் பண்ணுங்க.! - An easy way to peel hard boiled eggs