ETV Bharat / entertainment

தி கோட்: படத்தில் அப்பாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்... விஜய பிரபாகரன் உருக்கம்! - Vijayakanth Sons Watched Goat Movie - VIJAYAKANTH SONS WATCHED GOAT MOVIE

தேனியில் உள்ள தனியார் திரையரங்கில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தை மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் இணைந்து பார்த்தனர்.

கோட் திரைப்படத்தை பார்வையிட்ட சண்முக பாண்டியன், சரத்குமார் மற்றும் விஜய பிரபாகரன்
கோட் திரைப்படத்தை பார்வையிட்ட சண்முக பாண்டியன், சரத்குமார் மற்றும் விஜய பிரபாகரன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 11:19 AM IST

தேனி: நடிகர் விஜய் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிப்பில் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தின் வாயிலாக நடிக்கவைக்கப்பட்டுள்ளார். இதற்காக நடிகர் விஜய், கோட் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு விஜயகாந்த்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதாவையும், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரையும் வீட்டிற்கு நேரில் சேன்று சந்தித்திருந்தார்.

இத்தகைய சூழலில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், சரத்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வரும் நிலையில், தேனியில் உள்ள தனியார் திரையரங்கில் கோட் திரைப்படத்தை விஜயகாந்த்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் நடிகர் சரத்குமார் மற்றும் அவர்களது படக்குழுவினருடன் சென்று பார்த்தனர்.

இதையும் படிங்க: 'கடைசி உலகப்போர்' படத்தின் சஸ்பென்ஸை உடைத்த ஹிப்ஹாப் தமிழா!

இதற்கு முன்னதாக திரையரங்கிற்கு வருகை தந்த விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சரத்குமாருக்கு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தாவெக நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

கோட் திரைப்படத்தை பார்வையிட்ட சண்முக பாண்டியன், சரத்குமார் மற்றும் விஜய பிரபாகரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "AI தொழில்நுட்பத்தில் அப்பா வந்த காட்சியில் ஒவ்வொரு நொடியும் அவரது முடியில் இருந்து கண், மூக்கு, வாய் என அப்பாவை பார்த்துக் கொண்டே இருந்தேன். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா வந்த காட்சியை வெங்கட் பிரபு சிறப்பாக இயக்கியுள்ளார். விஜய்யும் நன்றாக நடித்துள்ளார்.

அப்பாவுக்கும், விஜய்க்கும் இடையே செந்தூரப் பாண்டியன் படத்தில் இருந்தே பாசமும், பந்தமும் தொடர்ந்து வருகிறது. மேலும் விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவர். ஆகவே இது ஒரு குடும்பப் படமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.