ETV Bharat / entertainment

தேர்தல் முடிவுக்காக வெயிட்டிங்கா த.வெ.க? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சீக்ரெட் உடைத்த நிர்வாகி! - Tamilaga Vettri Kazhagam - TAMILAGA VETTRI KAZHAGAM

TVK Vijay: நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் தனது கொடி, பிரச்சார பாடல் ஆகியவற்றை மாநாட்டில் அறிமுகப்படுத்தும் என்றும், மாநாட்டுக்குப் பிறகு தான் மாணவர்கள் சந்திப்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் தவெக கட்சி நிர்வாகி ஒருவர் கூறி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் புகைப்படம்
தமிழக வெற்றிக் கழகம் புகைப்படம் (credits - TVK Vijay X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 5:01 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவரது படங்கள் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் விஜய்க்கு அரசியல் எண்ணம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். தற்போது அரசியல் கட்சி தொடங்கி உறுப்பினர்கள் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி வருகிறார். உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி தொடங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளார் விஜய்.

கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கு நிர்வாகிகளை நியமித்து, அதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. கட்சியின் தலைவராக விஜயும், பொதுச் செயலாளராக ஆனந்த் என்கிற முனுசாமி, பொருளாளராக வெங்கட் ரமணன், தலைமை நிலைச் செயலாளராக ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தஹிரா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டியதுடன், சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். அதேபோல், இந்த ஆண்டும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை விரைவில் விஜய் சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், தனது அரசியல் பயணத்திற்கான ஏற்பாடுகளை விஜய் செய்து வருகிறார். குறிப்பாக, பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த மாநாட்டில் கட்சியின் கொடி, பிரச்சார பாடல் உள்ளிட்டவற்றை அறிவிக்க உள்ளதாகவும், மாநாடு மதுரையில் நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து, இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பார் என்று கூறப்படுகிறது.

பின்னர், தனது அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ளார். மாநாட்டுக்குப் பிறகே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைச் சந்திக்கும் நிகழ்வு நடக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், கட்சி நிர்வாகிகளுக்கு இதுகுறித்து எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மாநாட்டுக்குப் பிறகே இந்த சந்திப்பு நடக்கும் என்கின்றனர், கட்சி நிர்வாகிகள்.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவரை ஈடிவி பாரத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற கட்சியிலிருந்தும் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.‌ ஆனால், தற்போது வரை ஆன்லைனில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கட்சியின் கொடி மற்றும் பாடல் குறித்து தலைமைக் கழகம் அறிவிப்பார்கள். அரசியல் என்று வந்தபிறகு ஒளிவுமறைவு கிடையாது. எதுவாக இருந்தாலும், தலைமையிலிருந்து அறிவிப்பு வரும். மாநாட்டுக்கு பிறகுதான் மாணவர்கள் சந்திப்பு இருக்க வாய்ப்புள்ளது.

கடந்த முறை நடிகராக மாணவர்களைச் சந்தித்தவர், இம்முறை ஒரு கட்சித் தலைவராகச் சந்திக்க உள்ளார். இதனால் விஜய் என்ன பேசுவார் என்று அனைத்து தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள், தற்போது மாணவர்கள் மத்தியில் என்ன பேசுவார் என்று காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதுமுடிந்து, மாநாடா அல்லது அதற்கு இடையிலேயே மாநாடா என்பதை அவர்தான் முடிவு செய்வார். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிவு வரட்டும், அதுவரை காத்திருங்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழித்தாரும் வாழ்க, என்னை பகைத்தாரும் வாழ்க! வைரமுத்து பதிவால் மீண்டும் சூடுபிடிக்கும் இளையராஜா பிரச்சனை? - Vairamuthu Vs Ilayaraja

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.