ETV Bharat / entertainment

'லியோ'வை விஞ்சியதா 'கோட்'? முதல் நாள் வசூல் எவ்வளவு? - GOAT world wide box office - GOAT WORLD WIDE BOX OFFICE

GOAT world wide box office collections: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 126.32 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
கோட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் (Credits - AGS Entertainment)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 6, 2024, 5:27 PM IST

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெVdட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று (செப் 5) வெளியான திரைப்படம் ’கோட்’ (Greatest Of all time). யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள கோட் படத்தில் பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கோட் திரைப்படம் விஜய் திரை வாழ்வில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். கோட் திரைப்படத்தின் பாடல்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும், படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்பை எகிறச் செய்தது. ஒரு வழியாக நேற்று கோட் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

கோட் படத்தில் த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோல்களில் நடித்துள்ளனர். படத்தில் உள்ள எதிர்பாராத ட்விஸ்ட்கள் ஆடியன்ஸை தியேட்டரில் ஆர்ப்பரிக்க செய்தது. கோட் படத்தின் வசூல் 100 கோடிக்கு குறைவு என தகவல் வெளியான நிலையில், படத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் கோட் படத்தின் உலக அளவில் முதல் நாள் வசூலை பதிவிட்டுள்ளார்.

உலக அளவில் கோட் படத்தின் வசூல் 126.32 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் முன்னதாக வெளியான லியோ முதல் நாளில் 148 கோடி வசூல் செய்தததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்கள் விநாயகர் சதுர்த்தி மற்றும் விடுமுறை தினங்கள் என்பதால் ’கோட்’ படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இளைய தளபதியாக கலக்கிய கோட் வில்லன் விஜய்..தமிழ் சினிமாவில் வில்லன்களாக கொண்டாடப்பட்ட ஹீரோக்கள் ஒரு பார்வை! - Vijay praised for GOAT villain role

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.