சென்னை : இந்திய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸை ஹிந்தி மொழியில் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியானது அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட்டது. அந்த வகையில், தமிழில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில் இந்த வருடம் நடைபெறும் பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து விலகப் போவதாக திடீரென்று கமல்ஹாசன் அறிவித்தார். தக் லைஃப், கல்கி 2ம் பாகம், இந்தியன் 3 என பல்வேறு திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியிருப்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல்ஹாசன் அறிக்கை மூலம் உறுதிபடுத்தி இருந்தார்.
இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இந்தாண்டு நடைபெற உள்ள பிக் பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.. ❤️🔥 ஏன்னா, இந்த வாட்டி " ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." 🔥 bigg boss tamil season 8.. விரைவில்.. 😎 #VJStheBBhost @vijaytelevision @disneyplusHSTam 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision… pic.twitter.com/LKYEiEayBW
— VijaySethupathi (@VijaySethuOffl) September 11, 2024
இதையும் படிங்க : உயிரே பட நடிகையின் தந்தை மரணம்! விபத்தா? கொலையா? நிலவும் மர்மம்! - Actress Malaika Arora Father Dies
அந்தவகையில் இன்று(செப் 11) பிக்பாஸ் சீசன் 8ன் ப்ரோமோவை முதல்முறையாக பொதுமக்கள் வெளியிட்டனர். ப்ரோமோவில் 'ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு' என்று விஜய் சேதுபதி கூறும் டயலாக் நிகழ்ச்சியின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ள நிலையில், கடந்தாண்டு கமல்ஹாசனால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி மீண்டும் போட்டியாளராக உள்ளே போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 8ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.