ETV Bharat / entertainment

விஜயகாந்த் அல்லது சத்யராஜ்? மழை பிடிக்காத மனிதன் இயக்குநர் கூறுவது என்ன? - Mazhai Pidikkatha Manithan - MAZHAI PIDIKKATHA MANITHAN

Mazhai Pidikkatha Manithan: இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் கேப்டன் விஜயகாந்த் இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழு
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 9:31 PM IST

Updated : Jun 29, 2024, 10:18 PM IST

சென்னை: இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இப்படத்தில் மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும், சிறப்பு விருந்தினராக பிச்சைக்காரன் படத்தின் இயக்குநர் சசி மற்றும் தயாரிப்பாளர் டி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மழை பிடிக்காத மனிதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா (Credits - ETV Bharat Tamil Nadu)

மேடையில் தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், "முன்பு எல்லாம் திரையரங்கில் நல்ல வசூல் செய்து வெற்றி பெற்ற படங்கள் எல்லாம் 20 கோடி வரை டிஜிட்டல் விற்பனை ஆகும். ஆனால், தற்போது 3 கோடி ரூபாய்க்கு கூட விற்பனை ஆகவில்லை. தமிழ் சினிமாவில் திரையரங்கு ரசிகர்களை இழந்து விட்டோம், ஆந்திராவில் ஒவ்வொரு படமும் 100 கோடி, 200 கோடி ரூபாய் வரையில் லாபம் என்கின்றனர். ஆனால், தற்போதைய தமிழ் தயாரிப்பாளர்கள் நிலைமை மிக மோசமாக உள்ளது.

விமர்சகர்கள் படங்களைப் பார்த்து விமர்சனம் செய்ய வேண்டும். ரசிகர்களை திரையரங்கிற்கு வர விடாமல் செய்யும் விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதற்கு முன்பு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவை விமர்சகர்கள் காப்பாற்றுங்கள். ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டினாலும், விஜய் ஆண்டனி இப்படியே தான் இருப்பார். அவர் நன்றாக இருக்க வேண்டும் ”என்றார்.

மேடையில் இயக்குநர் விஜய் மில்டன் பேசுகையில், “விஜய் ஆண்டனி உடன் அதிகம் பயணம் செய்துள்ளேன். ஆனால், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன். கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. உதாரணமாக கருடன், மகாராஜா படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான கல்கி படம் கூட VFX தொழில் நுட்பத்தில் அசத்தியுள்ளனர். அந்த வரிசையில் இந்த மழை பிடிக்காத மனிதன் படமும் இருக்கும் என நம்புகிறேன்.

எந்தக் காரணத்தினால் தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் படங்களின் வியாபாரம் குறைகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த தயாரிப்பாளர் சிவா, முதலில் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிய பிறகு டிஜிட்டலில் வியாபாரம் செய்யும் போது திரையரங்கு லாப விகிதத்தை விட அதிக லாபத்தில் விற்க முடியும். தற்போது டிஜிட்டல் ரைட்ஸ் என்பது பல மடங்கு கீழ் இறங்கிவிட்டது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கட்டாயம் நடைபெறும். கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ் சினிமா எந்த நிலையில் இருந்ததோ அதை திரும்ப மீட்கோணர வேண்டும்.

இத்திரைப்படத்தில் விஜயகாந்த் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக கூறியிருந்தீர்கள், அது உண்மையா? என்ன நடந்தது என்ற கேள்விக்கு, கேப்டன் விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் இருக்கிறார். அது உருவமாக இருக்கிறாரோ அல்லது எங்களுக்கு நினைவாக இருக்கிறாரோ என்று நான் தற்போது சொல்ல விரும்பவில்லை. ஆனால், இந்த திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் இருக்கிறார்” என்றார்.

இதையும் படிங்க: "இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கல்கி 2898 AD" - ரஜினிகாந்த் புகழாரம்! - Rajinikanth congrats Kalki team

Last Updated : Jun 29, 2024, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.