ETV Bharat / entertainment

"இயேசுவைப் பற்றி தவறாகச் சித்தரிக்க கனவிலும் தோன்றாது"… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி!

Vijay Antony: ரோமியோ திரைப்பட நிகழ்ச்சியில், விஜய் ஆண்டனி இயேசு குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 6:34 PM IST

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளர் மட்டுமன்றி, நடிகராக நான், பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட ஹிட்படங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவரது நடிப்பில் 'ரோமியோ' என்ற திரைப்படம் வருகிற ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகிறது.

இதனை முன்னிட்டு நடந்த செய்தியாளர் சந்திப்பில், குடிப்பழக்கம் குறித்து பேசியபோது, இயேசு திராட்சை ரசம் குடித்தார் எனக் கூறியிருந்தார். அதாவது “ஆண், பெண் என்ற வேறுபாடு வேண்டாம், குடிப்பது என்றால் எல்லோருக்கும் ஒன்று தான். நான் குடியை ஆதரிக்கவில்லை. குடிப்பழக்கம் நம்ம ஊரில் ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது, முன்பு சாராயம் என்று இருந்தது.

2,000 ஆண்டுகளுக்கு முன் இயேசு கூட திராட்சை ரசம் குடித்திருக்கிறார்” என்று பேசியிருந்தார். விஜய் ஆண்டனியின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் அறிக்கை வெளியிட்டு, விஜய் ஆண்டனி 24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இல்லையெனில், அவரது வீட்டின் ‌முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர். இந்நிலையில், இது குறித்து நடிகர்‌ விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே, நான் முன்தினம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்தது தான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறியிருந்தேன்.

ஒரு பத்திரிகை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளைத் தொடர்ந்து, நான் கூறிய பதில்களை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை, நீங்களும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாகச் சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனிக்கு 24 மணிநேரம் கெடு விதித்த தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.