ஐதராபாத்: கேரளாவை பூர்விகமாக கொண்ட பிரபல நடிகை வித்யா பாலன், தமிழ், மலையாளம், இந்தி சினிமா என அனைத்து திரைத்துறையிலும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர். தமிழில் இயக்குநர் மணிரத்னத்தின் குரு, இயக்குநர் பால்கியின் பா உள்ளிட்ட படங்களிலும், ஹெச் வினோத் இயக்கிய நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவர், தனது படங்களில் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களுக்காக பேசப்படுபவர். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர்ஸ் (The dirty pictures) படத்தில், சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்த வித்யா பாலனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இவர் நடித்து, ஏப்ரல் 19ல் திரைக்கு வரவுள்ள தோ ஆர் தோ பியார் (Do Aur Do Pyaar) படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற வித்யா பாலன், பாலிவுட்டில் தனக்கு நடந்த மோசமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அவர் உடல் எடை குறித்த விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொண்டார் என்பது குறித்தும் பேசியுள்ளார்.
உரையாடலின் போது, ஒருவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் காரணமாக மிக மோசமான நிலையை அனுபவித்ததாக வித்யா தெரிவித்தார். தொடர்ந்து, “எனக்கு மோசமான நிலை ஏற்பட்டது. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், ஒருவர் என்னுடன் கொண்டிருந்த தனிப்பட்ட பிரச்சினையால் வந்தது. இவ்வளவு சோதனைகள் இருந்தபோதிலும், அதை கடந்து இன்று நான் மன வலிமையுடன் இருக்கிறேன்” என்றார்.
அப்போது, கடந்த காலத்தை நினைவு கூர்ந்த வித்யா பாலன், “நான் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எனது அம்மா, என் தலை முதல் கால் வரை நோட்டம் விடுவார். அப்போதே, எனது நம்பிக்கை உடைந்துவிடும். எனது உடல் எடை மற்றும் நான் அணியும் ஆடைகள் பற்றிய பார்வை நிறைய விஷயங்களில் என்னை கேள்விக்குள்ளாக்கியது.
ஆரம்பகாலங்களில் நம்பிகையற்ற மனநிலை மற்றும் தவறான எண்ணங்களால் பாதிக்கப்பட்டாலும், இப்போது எனது சொந்த விருப்பங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, மற்றவர்களின் கருத்துக்கள் எனது வாழ்வில் சூழாமல் இருப்பதை பார்த்துகொள்கிறேன். இப்போது, எனக்கு என்ன தோவையோ அதை செய்கிறேன், எனக்கு என ஆடை அணிவதற்கு விருப்பம் உள்ளதோ அதை செய்கிறேன்” என்றார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">