சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெயின்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் ’கோட்’ (The Greatest Of all time). யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள கோட் படத்தில் பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கோட் திரைப்படம் விஜய் திரை வாழ்வில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும்.
கோட் திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு தரப்பு ரசிகர்கள் கோட் திரைப்படம் நல்ல கமர்ஷியல் பொழுபோக்கு படமாக உள்ளது என கூறி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் கோட் திரைப்படம் எதிர்பார்த்த அளவு இல்லை, வெங்கட் பிரபு ஏமாற்றிவிட்டார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது.
சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் (sacnilk) அறிக்கையின் படி, இதுவரை கோட் திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் (செப் 8) வரை 137.2 கோடி இந்தியாவில் வசூல் செய்துள்ளது. அதேபோல் உலக அளவில் நான்கு நாட்களில் 285 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 4 நாட்களில் 120.85 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்று (செப் 9) மதிய காட்சி வரை கோட் திரைப்படம் 143.6 கோடி வ்சூல் செய்துள்ளது.
இதனைத் தவிர அதிகபட்சமாக கேரளாவில் 10.65 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி வசூல் செய்த திரைப்படம் கோட் என்ற சாதனையை படைத்துள்ளது. இதுவரை வரலாற்றில் 18 தமிழ் படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், அதில் 8 படங்கள் விஜய் நடித்ததாகும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சேட்டன்களுடன் வைப் செய்யும் தலைவர்..‘வேட்டையன்’ சிங்கிள் 'மனசிலாயோ' வெளியீடு! - Vettaiyan first single manasilaayo