ETV Bharat / entertainment

'கோட்' பட டிரெய்லரில் இதை கவனிச்சிங்களா? - ரசிகர்களுக்கு 'Plan B' சஸ்பன்ஸ் உள்ளதா? - THE GOAT TRAILER

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 6:21 PM IST

THE GOAT TRAILER : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிரெய்லரில் உள்ள டிகோடிங்க் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தி மற்றும் தமிழ் டிரெய்லர் போஸ்டர்கள்
இந்தி மற்றும் தமிழ் டிரெய்லர் போஸ்டர்கள் (Credits - archana kalpathi X Page)

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தி கோட் படத்தின் டிரெய்லர் இன்று (ஆக 17) வெளியாகியுள்ளது. டிரெய்லரில் ஆரம்பத்தில் அண்ணன் வரார் வழி விடு என்ற டயலாக் உடன் தொடங்குகிறது. அதன் பின் பிரசாந்த் வாய்ஸ் ஓவரில் விஜய் என்ட்ரி கொடுக்கிறார்.

மேலும் உங்களை லீட் பண்ண போறது புது லீடர் என்ற வசனம் இடம்பெறுகிறது. மேலும் விஜய்யின் 68வது படம் என்பதை குறிக்கும் வகையில், விஜய் '68 international successful operations' கையாண்டுள்ளதாக பிரசாந்த் கூறுகிறார். இதனைத்தொடர்ந்து இளம் தோற்றத்தில் வரும் விஜய் அணிந்துள்ள csk டி சர்ட்டில் definitely not என்ற வாசகம் உள்ளது. இது விஜய் சினிமாவை விட்டு விடைபெறக் கூடாது என ரசிகர்கள் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

டிரெய்லரின் கடைசியாக வரும் காட்சியில் விஜய் பூஜை செய்துவிட்டு ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலை பாடுகிறார். இந்த முருகன் பாடலை விஜய் கில்லி படத்தில் பாடியது மிகவும் பிரபலமானது.

மேலும், தெலுங்கு, இந்தி ஆகிய இரு மொழிகளிலும் தி கோட் டிரெய்லரின் கடைசி 15 விநாடிகள் தமிழை விட மாறுபாடாக உள்ளது. அந்த இரு மொழிகளிலும் 15 விநாடிகளில் வரும் சீனில் Plan B என்ற வசனங்களுடன் Mission Impossible மியூசிக்கில் விஜய் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. யூடியூப்பில் ட்ரெய்லர் வெளியாகி 46 நிமிடத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரியல் டைம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "உங்கள லீட் பண்ண போறது புது லீடர்" - மாஸ் வசனத்துடன் வெளியானது 'கோட்' டிரெய்லர்! - GOAT trailer

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.