சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்த விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் கொடிப் பாடலையும் அறிமுகப்படுத்தினார்.
மேலும், வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.
மேலும், விஜய் இருக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள கோட் திரைப்படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய், மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கொரட்டூர் பகுதியில் விஜயின் தாய் சோபனாவிற்காக சாய்பாபா கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடிகர் கார்த்தி கிராமத்து நாயகனாக கலக்கும் ’மெய்யழகன்’ பாடல்கள் நாளை வெளியீடு! - Meiyazhagan audio Release